ஆண்டாள் கருத்து: ராஜபாளையத்தை தொடர்ந்து சென்னையில் 2 காவல் நிலையங்களில் வைரமுத்து மீது வழக்கு பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆண்டாள் முன்பு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்- தீவிரமடையும் போராட்டம்- வீடியோ

சென்னை: ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, கவிஞர் வைரமுத்து மீது, சென்னையிலுள்ள 2 காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டாள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக ராஜபாளையம் காவல் நிலையத்தில் இந்து முன்னணியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

vairamuthu

இந்த நிலையில், வைரமுத்து மற்றும், நாளிதழ் ஆசிரியருக்கு எதிராக மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சென்னையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் கொளத்தூரிலும் இந்து முன்னணி நிர்வாகி முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாதரிப்பேட்டை போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனால் வைரமுத்துக்கு சட்டரீதியில் சிக்கல் அதிகரித்துள்ளது. ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள் வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் யாரும் மிரட்ட கூடாது என கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two complaints has been registered against Vairamuthu in Chennai police stations. Already a case has been registered in Rajapalayam police station against Vairamuthu.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற