டெல்லியில் புழுதிப் புயல் எதிரொலி.. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 2 விமானங்கள் ரத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடமாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் புழுதி புயல்-வீடியோ

  சென்னை: டெல்லியில் புழுதிப்புயல் வீசியதன் எதிரொலியாக சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  டெல்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகரை நேற்று முன்தினம் இரவு புழுதி புயல் தாக்கியது. என்சிஆர், ரோஹ்தக், பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட், காஜியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியுள்ளது.

  Two flights canceled from Chennai to Delhi by the sand storm

  இதனிடையே 20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதையடுத்து டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த வாரத்தில் சில நாட்கள் வட மாநிலங்களில் புழுதி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்லி, அரியனா, உத்திரபிரதேசத்தில் புழுதிப்புயல் மேலும் 3 நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வடமேற்கு இந்தியாவில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 2 தனியார் நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானம் 5 மணி நேரம் தாமதமாக வரவுள்ளது.

  சென்னையில் இருந்து டெல்லி மற்றும் அந்தமானுக்கு புறப்படும் 2 விமானங்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடையந்துள்ளனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Two flights canceled from chennai to delhi by the sand storm. From Chennai to Delhi and Andaman flights 5 hours delay.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற