இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னரே உள்ளாட்சி தேர்தல்... அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Two leaves symbol big roll in local body election -Minister Jayakumar

உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான உத்தேச காலஅட்டவணையை ஜூலை 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல்ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தினால் அதிமுக ஜெயிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே வேறு சின்னத்தில் நின்றால் ஒரு ஓட்டு கூட தேறாது என்பதை என்பதை இப்படியா வெளிப்படையாக அமைச்சர் ஒத்துக்கொள்வது என்று கேட்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finance Minister Jayakumar said that,Two leaves symbol get after local body election. HC seeks rough timetable from state election comission and state government within July 26.
Please Wait while comments are loading...