தென்காசி கழுகுமலை காட்டுக்குள் போன ஜோடி.. காதலி பேசிட்டிருக்கும்போது.. நொடியில் ஆடிப்போன பாறைப்பட்டி
தென்காசி: தென்காசியில் காட்டுப்பகுதிக்கு காதலர்கள் சென்றுள்ளார்கள்.. மனம் விட்டு பேசுவதற்காக காதலியை அங்கு அழைத்து சென்றுள்ளார் காதலன்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை தென்காசி போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி வெள்ளைச்சாமியின் மகள் உமா வயது 19.

தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வந்தார் உமா. அதே பள்ளியில் படித்த தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கொளக்காட்டான்குறிச்சியைச் சேர்ந்த மாரிச்சாமியின் மகன் ராஜேஷ் வயது 25 என்பவருடன் உமாவுக்கு காதல் ஏற்பட்டது.
தென்காசி உமா
ஆனால் நாளடைவில் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.. இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பயிற்சி கட்டணம் செலுத்துவதற்காக, காவலர் பள்ளிக்கு உமா வந்திருந்தார்..
அப்போது உமாவை ராஜேஷ் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றார்.. ஆனால் உமா சரியாக பேசாததால், நேரில் வந்தால் விரிவாக பேசலாம் என்று கூறி சமாதானத்துக்கு அழைத்துள்ளார் ராஜேஷ்,.
உமாவும் இதற்கு ஒப்புக் கொள்ளவும், அன்று மாலையே, உமாவை பைக்கில் கஸ்தூரிரெங்கபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார் ராஜேஷ்... அங்கு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த ராஜேஷ், உமாவை தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில் உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காட்டுப்பகுதியில் காதலர்கள்
இதற்கு பிறகு ராஜேஷ் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தகவலின் பேரில் போலீசார் அவரை கழுகுமலை போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடைமுறைகளின்படி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இறந்த உமாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சாட்சிகள் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போலீசில் ராஜேஷ் அளித்த வாக்குமூலம் அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது..
பரபரப்பு வாக்குமூலம்
"தென்காசி மாவட்டம், பாறைப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியில் படித்த உமாவும், நானும் கடந்த 8 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தோம்.. ஆனால் திடீரென இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வேறொருவருடன் உமா தொடர்பில் இருந்தார்.. இது எனக்கு தெரியவந்ததுமே அதிர்ச்சி அடைந்தேன்..
இதை பற்றி உமாவிடமே நேரடியாக கேட்டபோதுதான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்தோம். நேற்று பயிற்சி பள்ளியில் ஃபீஸ் கட்டுவதற்காக உமா வந்தது தெரியவந்தது.. உடனே போனில் பேசினேன். நேரில் வருவதாக சொல்லி பயிற்சி பள்ளிக்கு சென்றேன். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
பிறகு மனம் விட்டு பேசுவதற்காக உமாவை கஸ்தூரிரெங்கபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பேசியது குறித்து கேட்டேன். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கொல்லனும்னு நினைக்கல
அப்போது ஆத்திரம் அடைந்த நான், கோபத்தில் அவளது கழுத்தை நெரித்தேன். அவள் மயங்கி விழுந்தாள். இதை பார்த்ததுமே எனக்கு ஒன்றுமே புரியவில்லை... உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து உமாவை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தேன். ஆனால் உமா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் உமாவை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவள் இறந்து விட்டாள். ஆத்திரத்தில் தவறு செய்து விட்டோமே என வேதனையடைந்ததால்தான், வெம்பக்கோட்டை போலீசில் சரண் அடைந்தேன்" என்று கண்ணீர் மல்க ராஜேஷ் வாக்குமூலம் தந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications