For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவாரிகளில் ஆய்வுக்காக சகாயம் பயன்படுத்திய ஆளில்லா விமானம் கிரானைட் பாறையில் மோதி விபத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிரானைட் முறைகேடு தொடர்பாக, குவாரிகளில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், ஆளில்லா குட்டி விமானம் மூலம் கள ஆய்வு மேற்கொண்டார். விமானம் பறந்த 20 நிமிடங்களில் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிரானைட் முறைகேடுகள் குறித்து 4-வது கட்டமாக 5 வது நாள் இன்று ஆய்வு நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள கருப்புக்கால் என்ற இடத்தில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Unmanned Aerial Vehicle inspects granite quarries

இந்த கருப்புக்கால் பகுதியில் இருக்கின்ற குவாரி மிகவும் நீளமான குவாரி நேரடியாக இந்த குவாரி நீளத்தை கணக்கிட முடியாது. கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள இந்த குவாரியில் மிகவும் ஆழமாக இருக்கிறது.

பலநூறுஅடிகள் ஆழம் கொண்ட இந்த குவாரி நேரடியாக உள்ளே இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது அதே போன்று இதற்கு முன்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் முறையாக இதன் இழப்பீடு கணக்கிடு செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று இதற்காக தனியாக ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விமானம் பறந்த 20 நிமிடங்களில் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. 600 அடி பள்ளத்தில் விழுந்த விமானத்தை மதுரையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Sagayam team deployed a portable unmanned aerial vehicle (UAV) for inspecting a granite quarry at karuppukal in Madurai district on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X