தலித்துகள் காதலித்தால் இப்படித்தான் செய்வோம்.. உபியில் ஜாதி வெறியாட்டம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: டிஜிட்டல் இந்தியாவில் தலித்துகள் காதலிக்கக் கூடாது என்று சட்டம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காதல் உயிர் இயற்கை. அதனை செய்வதற்குக் கூட இந்தியாவில் உயர் ஜாதியில் பிறந்திருக்க வேண்டும் போல.

உத்தர பிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருவரும் காதலித்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் வெளியே சென்ற போது, அவர்களை ஒரு கூட்டம் வழி மறிக்கிறது. அவர்களிடம் என்ன ஜாதி, எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தது அந்தக் கொலைகாரக் கூட்டம்.

அவர்கள் இருவரும் தலித்துகள் என்று அறிந்த பின்னர், கேட்க நாதியா இருக்கப் போகிறது என்ற ஆணவத்தில் காதலர்களின் ஆடைகளை அவிழ்த்து முழு நிர்வாணமாக்குகிறார்கள். பின்னர், அவர்கள் அணிந்திருந்த செருப்பையும் கழட்டச் சொல்லி சித்ரவதை செய்கிறார்கள்.

ஆடு மாடு போல்

ஆடு மாடு போல்

அவர்கள் இருவரையும் அடித்து உதைத்த அந்தக் கூட்டம், ஒருவரை ஒருவர் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் செல்ல கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் மறுப்பு தெரிவிக்கக் கூட முடியாத அளவிற்கு அவர்களை ஆடு மாடு போல் அடித்துத் துன்புறுத்துகிறது அந்தக் கும்பல்.

வெட்கம் கெட்ட கூட்டம்

வெட்கம் கெட்ட கூட்டம்

அதோடு மட்டுமா நின்றது ஜாதி வெறியாட்டக்காரர்களின் களியாட்டம். மேள தாளம் அடித்து, பாரத் மாத கி ஜே என்று கத்தி கோஷமிட்டனர். ஓ வென கத்தி அவர்களை இருவரையும் நாணி கோணி கூசச் செய்தனர். இவ்வளவு அட்டூழியத்தையும் செய்த அவர்களுக்குக் கொஞ்சமும் வெட்கம் மானம் இல்லை.

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

கொளுத்தும் வெயிலில் நிர்வாணமாக நடந்து செல்லும் அவர்கள் நடக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழும் போது, கம்பு, தடி எனக் கொண்டு தாக்கி கொடுமை செய்கிறது வெறியாட்ட கும்பல். காதலர்கள் இருவரையும் அடிக்கும் போதுதான் எவ்வளவு சந்தோஷம்? வெறித்தனத்தோடு பாரத் மாதாகி ஜே என்று ஆனந்தமாக கத்துவதன் மூலம் தங்களது வக்கிர புத்தியை வெளிக் காட்டுகின்றனர்.

வைரலாகும் வீடியோ

மிக மோசமான சம்பவமான இது, அந்தக் கும்பலால் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. அது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஆர்வலர்களின் கண்களில் இயலாமையின் கண்ணீரோடு பார்க்கப்பட்டு கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Dalit couple had been stripped and paraded naked in the Uttar Pradesh. Shocking video spread viral.
Please Wait while comments are loading...