வந்தே பாரத் மிஞ்சிடுச்சே..நெல்லைக்கும் வருதே.. ஒரு ஹைலைட் நடந்திருக்கு பாருங்க.. திணறிய திருநெல்வேலி
திண்டுக்கல்: நெல்லைக்கு குட்நியூஸ் சொல்லியதுடன், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.. இந்த செய்தியைக்கேட்டு, திருநெல்வேலியே திக்குமுக்காடிப்போயுள்ளது.. மேலும், சுவாரஸ்ய சம்பவம் ஒன்று திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார்.. விரைவில்

அதிரடிகள்: இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார்.. விரைவில் நெல்லைக்கும் வந்தே பாரத் வரப்போகிறதாம். இதை மத்திய அமைச்சர் எல்.முருகனே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெஷல் ட்ரெயின்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் நிகழ்வு தொடக்க விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் - சென்னை ரயில் நின்று செல்லும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
அப்போது எல்.முருகன் பேசியபோது, "தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக இதுவரை இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6,080 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 73 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்துக்கு மட்டும் ரூ.413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத்: தமிழகத்தில் 9 புதிய ரயில் பாதைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பழநி - ஈரோடு புதிய ரயில் பாதை திட்டமும் அடங்கும். மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என்றார்..
இந்த நிகழ்ச்சியில், திமுக மற்றும் பாஜக தரப்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திருந்தனர்.. நிகழ்ச்சியில் மதுரை கோட்ட மேலாளர் அனந்த், ப.வேலுச்சாமி, எல்.முருகன் ஆகியோர் பேசத்தொடங்கியபோதெல்லாம், "பாரத் மாதா கி ஜே" என்று பாஜகவினர் கோஷமிட்டபடியே இருந்தனர்... இதற்கு பிறகு ரயில் புறப்பட்டபோது, பாஜக, திமுக தொண்டர்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கட்சிக் கொடிகளுடன் ரயிலில் ஏறினார்கள். பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கீழே இறங்கிவிட்டனர்..
மாறி மாறி: நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் எல்.முருகன் காரில் ஏற சென்றபோது, ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த திமுகவினர், "முதல்வர் ஸ்டாலின் வாழ்க" என்று கோஷங்களை எழுப்பினார்கள்.. இதைப்பார்த்ததும் பாஜகவினர், பதிலுக்கு "பிரதமர் மோடி வாழ்க" என்று கோஷமிட்டனர்.. எல்.முருகன் அங்கிருந்து கிளம்பி மறையும்வரை, இரு கட்சியினர் முழக்கங்களும் மாறி மாறி ஒலித்துக்கொண்டேயிருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications