கமல் மக்கள் பணியாற்றுவதை வரவேற்கிறோம்: திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்- வீடியோ

  கோவை: கமல் மக்கள் பணியாற்றுவதை வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  எண்ணூர் துறைமுகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கழிவுகளை அகற்றாவிட்டால் மழைக்காலத்தில் வடசென்னைக்கு ஆபத்து என நடிகர் கமல்ஹாசன் நேற்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையிலேயே நடிகர் கமல் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார்.

  VCK leader Thirumavalavan welcomes kamal for his field work.

  அப்போது அப்பகுதி மக்களிடமும் நடிகர் கமல்ஹாசன் குறைகளை கேட்டறிந்தார். கமல்ஹாசன் முதல்முறையாக களத்தில் இறங்கி பணியாற்றுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

  கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன் மக்கள் பணியாற்றுவதை வரவேற்கிறோம் என்றார். மேலும் தனிநபர் தாக்குதல் மற்றும் தேவையற்ற விமர்சனங்களை வைக்கக்கூடாது என்றும் கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

  தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறையில் இரு கட்சியினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  VCK leader Thirumavalavan welcomes kamal for his fieled work. He urged his party members to do not involve in the attacks of individuals.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற