மாட்டுக்கறிக்காக உயிரை கொடுப்போம்.. ஓடும் ரயிலை மறித்த 'சிறுத்தைகள்'.. புதுவையில் பரபரப்பு
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட விசிகவினர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஒன்று கூடினர்.

ஓடும் ரயிலை மறித்து…
அப்போது, புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரும் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயிலை விடுதலை சிறுத்தைகள் மறித்தனர். ஓடும் ரயிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்ப்பு கோஷம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்த போது, மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். மத்தியில் ஆளும் பாஜகவின் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

கைது
இதனைத் தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். அனைவரும் மாலை விடுவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications