For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பீச்சா அதை நாங்க பார்த்ததே இல்லையே" என்ற பழங்குடியின சிறுமிகளின் ஆசையை நிறைவேற்றிய திமுக எம்எல்ஏ

பீச் என்றால் என்ன , அதை நாங்கள் பார்த்ததே இல்லையே என்ற பழங்குடியின சிறுமிகளின் ஆசையை நிறைவேற்றினார் திமுக எம்எல்ஏ.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கடற்கரையை பார்த்ததில்லை, பேருந்தில் பயணம் செய்ததில்லை என்ற பழங்குடியின சிறுமிகளின் ஆசையை வேலூர் திமுக எம்எல்ஏ நந்தகுமார் நிறைவேற்றினார்.

சர்வ சிக்ஷ் அபியான் திட்டம் மூலம் அணைக்கட்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் என்ற ஒரு கல்வி மையம் உள்ளது. இங்கு 55 சிறுமிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் ஜர்தான் கொல்லை, பாலம்பட்டி மற்றும் பீஞ்ச மண்டை ஆகிய மலைவாழ் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

வேலூர் திமுக எம்எல்ஏ

வேலூர் திமுக எம்எல்ஏ

இந்த பள்ளி மாணவிகளை கடந்த ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று வேலூர் திமுக எம்எல்ஏ நந்தகுமார் சந்தித்து இனிப்புகளை வழங்கினார். அப்போது தாங்கள் கடற்கரையை பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மாணவிகள்

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மாணவிகள்

இதனால் எம்எல்ஏ மனம் வருத்தமடைந்தார். இதையடுத்து அவர்களின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார் வேலூர் எம்எல்ஏ நந்தகுமார்.. அதன்படி நேற்றைய தினம் அவர்களுக்கென சிறப்பு பஸ்ஸில் 55 சிறுமிகள் மற்றும் 10 ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார் எம்எல்ஏ.

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

சுமார் 10.30 மணிக்கு கடற்கரைக்கு வந்த சிறுமிகள் கடற்கரை தண்ணீரில் நன்கு ஆட்டம் போட்டனர். கடற்கரை மண்ணில் விளையாடினர். இதையடுத்து சிறுமிகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தது முதல் குதிரை சவாரி செய்ய வைத்தது வரை அனைத்தையும் செய்தார் எம்எல்ஏ.

மதிய உணவு

மதிய உணவு

அங்குள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை பார்வையிட்டனர். மதிய உணவுக்காக அந்த மாணவிகளை எம்எல்ஏ விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்ககென தயார் செய்யப்பட்ட பிரியாணி உணவு பரிமாறப்பட்டது.

வேலூருக்கு திரும்பிய மாணவிகள்

வேலூருக்கு திரும்பிய மாணவிகள்

இதையடுத்து அவர்கள் அனைவரும் பிர்லா கோளரங்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அறிவியல் ரீதியான விஷயங்களை மாணவிகளுக்கு எம்எல்ஏ சொல்லிக் கொடுத்தார். இதையடுத்து அவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டு மீண்டும் வேலூருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நன்றி

நன்றி

இதுகுறித்து எம்எல்ஏ நந்தகுமார் கூறுகையில் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்ததற்கு எனக்கு கடவுள் மனவலிமையை கொடுத்துள்ளார். அதற்கு நன்றி என்றார்.

English summary
DMK legislator A.P. Nandakumar went beyond his call of duty on Friday and took tribal children from his constituency to the beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X