For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு கிரிக்கெட் போட்டி பார்க்க வேண்டும்.. வேல்முருகன் கொந்தளிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நிறைய விதிமுறைகள்- வீடியோ

    சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மைதான நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் பேனர்கள், கொடிகளுக்கு தடை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    கிரிக்கெட் - கட்டுப்பாடு

    கிரிக்கெட் - கட்டுப்பாடு

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் பொருட்களை வீசுபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    வன்மையாக கண்டிக்கத்தக்கது

    வன்மையாக கண்டிக்கத்தக்கது

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றும் அவர் கூறினார்.

    புறக்கணிக்க வேண்டும்

    புறக்கணிக்க வேண்டும்

    இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    TVK party leader Velmurugan condemns the restriction for the cricket fans. Cricket board have been imposed Various restrictions for the fans in the IPL matches.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X