கதகளிக்காக வாழ்ந்து, கதகளி ஆடும்போதே மேடையில் உயிரை விட்ட மஹா கலைஞன் மடவூர் வாசுதேவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கதகளி நடனத்தில் புகழ் பெற்ற மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவரான மடவூர் வாசுதேவன் நாயர் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்

ஒவ்வொரு நாட்டியமும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் மக்களின் பழக்கவழக்கத்தையும் பிரதிபளிக்கும் என்பது மரபு. அந்த வகையில் முழுக்க முழுக்க உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நடனத்தின் சிறந்தத வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவது கதகளியாகும்.

கதகளி நடனத்தில் தலைசிறந்து விளங்கிய ஆசான் பத்ம பூஷண் மடவூர் வாசுதேவன் மேடையில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது மயக்கமடைந்தார். இதனால் பதறிப்போன நடனக்குழுவினரும் மக்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில் மேடையிலேயே அவர் உயிர் போயிருந்தது. அவருக்கு வயது 88.

 கதகளி மீது ஆசை

கதகளி மீது ஆசை

உலகளவில் கதகளி நடனத்தில் பிரபலமிக்க மடவூர் வாசுதேவன் நாயர், தனது 13வது வயதில் கேரளாவில் கதகளி நடனத்தை பயில தொடங்கினார். முகம் முழுவதும் பல வர்ணங்கள் பூசி, ஒப்பனை செய்து கொண்டு மற்ற நடனங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கதகளி நடனம் இருந்ததால் அதன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது

 கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்

கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்

கொஞ்சம் கொஞ்சமாக கதகளியை நேசிக்க ஆரம்பித்த அவர், ஒருக்கட்டத்தில் கதகளியை சுவாசிக்க ஆரம்பித்தார். அதனால் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக சுலபமாக தத்ரூபமாக செய்ய ஆரம்பித்தார். ராவணன், துரியோதனன், கீசகன் மற்றும் கம்சன் ஆகிய புராண காலநாயகர்களின் வேடத்தினை வாசுதேவன் ஏற்றால் அன்று மேடை அதிரும்.

 பத்மபூஷன் விருது

பத்மபூஷன் விருது

கதகளிக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தன் வாழ்நாளை சமர்ப்பித்த வாசுதேவனுக்கு 1997ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும் மற்றும் கலாமண்டலம் உள்ளிட்ட பிற விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல கடந்த 2011ம் ஆண்டு பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 ராவணனாக வாசுதேவன்

ராவணனாக வாசுதேவன்

அகஸ்தியகூடு மகாதேவ கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற ராமாயண நாடகத்தில் மகாதேவன் பங்கேற்றார். தனக்கு மிகவும் பிடித்த ராவணன் பாத்திரத்தை நாடகத்தில் ஏற்ற வாசுதேவன் மேடையே அதிரும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இரவு 10.40 மணியளவில் மேடையில் இருந்தபடியே நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

 மேடையில் பிரிந்த உயிர்

மேடையில் பிரிந்த உயிர்

நடனமாடிக்கொண்டிருக்கும் போது வாசுதேவன் மயக்கமடைந்தால் பதறிப்போன நடனக்குழுவினரும் மக்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிர் தான் நேசித்த மேடையிலேயே பிரிந்து விட்டதை தூக்கி சென்ற யாரும் உணரவில்லை. 13 வயதில் மேடையில் தொடங்கிய வாசுதேவனின் கதகளி வாழ்க்கை 88 வயதில் அதே மேடையிலேயே முடிந்தது. அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Veteran kathakali artist Madavur Vasudevan Nair died in the stage while he was performing as Ravanan. Kerala CM Pinarayi vijayan and Cinema Celebrities has expressed their condolence for his death

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற