கோவை கொண்டுவரப்பட்டது மறைந்த நடிகர் பீலிசிவம் உடல்...பொதுமக்கள் அஞ்சலி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல்நலக்குறைவினால் காலமானார்.
Recommended Video

மதுரை : பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது.
தூரத்து இடி முழக்கம்' படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு நடிகர் விஜயகாந்துடன் விருத்தகிரி வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகர்
முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் சின்னத்திரையிலும் வலம் வந்தார். உறவுகள் போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

வாழ்நாள் சாதனையாளர்
இவர் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர். 1995ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு நாடகத்துறையில் சிறந்த நடிகர் என்ற கலைமாமணி பட்டத்தை அளித்துள்ளது.

வேலூரில் மரணம்
சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

சொந்த ஊரில் அஞ்சலி
இந்நிலையில் இறந்த பீலிசிவத்தின் உடல் வேலூரில் இருந்து இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications