மீண்டும் விசாரணை... ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, நடிகர் சரத்குமார் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Vijayabaskar and vice chancellor Geeta lakshmi attend IT inquiry

அதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். ஆனால் துணை வேந்தர் கீதா லட்சுமி விசாரணைக்கு ஆஜராகவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்தே அவர் ஆஜர் ஆனார்.

இன்று மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணைவேந்தர் கீதா லட்சுமி இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இந்த விசாரணைக்குப் பிறகு, வருமான வரித்துறையினருக்குக் கிடைத்துள்ள முக்கிய ஆவணங்களைக் கொண்டு, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Vijaya baskar and vice chancellor Geeta lakshmi again came for inquiry in Income tax office.
Please Wait while comments are loading...