அன்று கலாம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்ட விஜயகாந்த்...இன்று கட்சி அலுவலகத்தில் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அப்துல் கலாமின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியிலும், பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் பேக்கரும்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர்.

Vijayakanth paid tribute to Abdul Kalam

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று அப்துல்கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாளாமல் விஜயகாந்த்தும், பிரேமலதாவும் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் தேற்றினர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கலாம் என்று புகழாரம் சூட்டிய விஜயகாந்த், டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை இந்திய மாணவர் தினமாக அறிவித்து சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.

Vijayakanth paid tribute to Abdul Kalam

இந்நிலையில் அப்துல் கலாமின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அப்துல் கலாம் படத்திற்கு விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK Chief Vijayakanth paid attribute to Dr.A.P.J.abdul Kalam at his office at Koyambedu with his party cadres.
Please Wait while comments are loading...