For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷாலுக்கு விதவிதமாக நெருக்கடி.. இனிமேல் எல்லாம் இப்படித்தானாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா- வீடியோ

    சென்னை: நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், நடிகர் விஷாலுக்கு நடிகர் சங்கத்திற்குள் நெருக்கடி அதிகரித்துள்ளது.

    நாசர், விஷால், பொன்வண்ணன் போன்றோர் இணைந்து கை கோர்த்துதான், சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் அடங்கிய எதிரணியை தோற்கடித்து, தென் இந்திய நடிகர் சங்கத்தை கைப்பற்றி அசத்தினர்.

    நடிகர் சங்கத்தில், நாசர் தலைவராகவும், பொன்வண்ணன் துணை தலைவராகவும் விஷால் பொதுச் செயலாளராகவும் உள்ளனர்.

    பொன்வண்ணன் ராஜினாமா

    பொன்வண்ணன் ராஜினாமா

    இந்த நிலையில்தான் பொன்வண்ணன் திடீரென இன்று, துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட முடிவு செய்ததை எதிர்த்து தான் ராஜினாமா செய்வதாக ஒரு காரணத்தை கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் அவர்.

    விருப்பம் இல்லை

    விருப்பம் இல்லை

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டதை ஆளும் தரப்பு விரும்பவில்லை என்பதன் மற்றொரு அடைாயளம்தான் பொன்வண்ணன் ராஜினாமா என்கிறார்கள் நடிகர் சங்க வட்டாரத்தில்.

    விஷால் வேட்புமனு தள்ளுபடி

    விஷால் வேட்புமனு தள்ளுபடி

    விஷால் வேட்புமனுவை தள்ளுபடி செய்தேயாக வேண்டும் என்று சாலை மறியல் கூட நடத்தினர் அதிமுகவினர். அதேபோல அவர் வேட்புமனு இழுபறிக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்ட இருவர், அது தங்கள் கையெழுத்து இல்லை என திடீரென கூறிவிட்டனர்.

    குறுக்கே வந்த சேரன்

    குறுக்கே வந்த சேரன்

    இந்த நிலையில், இயக்குநர் சேரன் திடீரென நடிகர் சங்கத்திற்குள் அமர்ந்து, விஷால் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். விஷால் வேட்புமனு தள்ளுபடியான பிறகே அவர் தனது போராட்டத்தை கைவிட்டார்.

    வெற்றி நாயகன் விஷால்

    வெற்றி நாயகன் விஷால்

    இப்போது பொன்வண்ணன் ராஜினாமா பின்னணியிலும் ஆர்.கே.நகர் தேர்தல்தான் உள்ளது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்றவற்றில் நடந்த தேர்தல்களில் எளிதில் வென்ற விஷால், அரசியலிலும் வெற்றிக்கனியை பறிக்க திட்டமிட்டார். ஆனால் அவரது வளர்ச்சி தங்களுக்கு ஆபத்து என சிலர் நினைக்க தொடங்கியுள்ளதன் வெளிப்பாடே அவருக்கு எதிரான இந்த தொடர் நெருக்கடிகள்.

    யாருக்கும் ஆசை வரக்கூடாது

    யாருக்கும் ஆசை வரக்கூடாது

    நடிகர் சங்கத்திற்கு உள்ளே விஷாலால் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்ட சிலரும், அரசியல் பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு விஷாலுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷாலுக்கு மட்டுமல்ல வேறு எந்த நடிகருக்கும் இனிமேல் அரசியல் ஆசையே எழாத அளவுக்கு இப்படியான நெருக்கடிகள் தொடரும் வாய்ப்புள்ளது என கண் சிமிட்டுகிறார்கள் நடிகர் சங்க வட்டாரத்தில்.

    English summary
    Vishal is facing backlashes in the politics and in the Nadigar Sangam too as some people dont want him to enter politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X