For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவுக்கு முட்டுக்கட்டை.. சசிகலா அணியின் பலத்தை பார்த்து தயங்கும் பாஜக!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Cabinet Meeting Headed By CM Edappadi Palaniswami

    சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கேட்கப்படுவதாகவும், ஆனால் சசிகலா அணியின் பலத்தை பார்த்து பாஜக இக்கோரிக்கையை பரிசீலிக்க யோசிப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அமைச்சரவையில், மாற்றங்கள் நடக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு கணிசமான இடங்களை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் சேர அதிமுகவும் விரும்புவதாக கூறப்படுகிறது. அக்கட்சி எம்.பி தம்பிதுரை நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    மோடி பரிசீலனை

    மோடி பரிசீலனை

    அதற்கு முன்பாக மத்திய உளவுத்துறை, தமிழகத்திலுள்ள அரசியல் நிலவரம் குறித்து விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பரிந்துரைகளை பார்த்த பிரதமர் மோடி, அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    உளவுத்துறை எச்சரிக்கை

    உளவுத்துறை எச்சரிக்கை

    இந்த தயக்கத்திற்கு காரணம், அதிமுக எம்எல்ஏக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், சசிகலா ஆதரவாளர்களாக மாறலாம் என்ற எச்சரிக்கைதான். சசிகலாவின் தயவால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற பல எம்எல்ஏக்கள் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளது.

    தினகரன் தரப்பு

    தினகரன் தரப்பு

    எனவே தினகரன் தரப்பிலிருந்து எவ்வளவு சீக்கிரம் எடப்பாடி தரப்புக்கு எம்எல்ஏக்கள் வருகிறார்களோ அந்த அளவுக்கு வேகமாக அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை தினகரன் தரப்பு பலம்மிக்கதாக மாறினால் அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவு கலைந்துவிடும். மோடி அதற்கு அனுமதி கொடுக்க மாட்டார் என்று தெரிகிறது.

    நேரடி யுத்தம்

    நேரடி யுத்தம்

    இதனிடையே இவ்விரு அணிகள் மோதலுக்கு நடுவே, அதிமுகவின் ஒரு பகுதி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் கட்சி பக்கம் நேரடியாகவே இழுக்கும் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளது. அதிமுக மருத்துவ அணி முன்னாள் இணை செயலாளர் ராஜதுரை பாஜகவில் இணைந்தார்.முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இணைந்தது பாஜகவிலுள்ள தமிழக தலைவர்கள் பலருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது. இதேபோன்ற அதிரடி மூவ்களையும் பாஜக காண்பிக்க உள்ளதாம்.

    English summary
    Some sources tell OneIndia that they may have been a misreading of this aspect and the Sasikala faction ought to have been taken into consideration while calling a truce. It is a wait and watch game now and all parties would wait for Dhinakaran who is leading the Sasikala faction to make the next move.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X