சிறந்த காவல்நிலைய விருதை தட்டி வந்த ஆய்வாளர் ஜோதி... கோவையில் உற்சாக வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இந்தியாவின் சிறந்த காவல்நிலையம் RS புரம் காவல்நிலையத்தின் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு-வீடியோ

  கோயம்புத்தூர் : நாட்டிலேயே சிறந்த காவல்நிலையம் என்று பெருமை பெற்ற கோவை ஆர் எஸ் புரம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜோதி விருது பெற்று காவல்நிலையம் வந்த போது அவருக்கு சக காவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட தேர்வில் தமிழகத்தில் இருந்து சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் மற்றும் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

  மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தகவலை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. இதில் கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் காவலர்கள் பெருமைப்பட முக்கிய காரணம் என்னவென்றால் ஆர்.எஸ்புரம் காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதல் இடம் பிடித்துள்ளது.

  கான்பூரில் விருது வழங்கும் நிகழ்ச்சி

  கான்பூரில் விருது வழங்கும் நிகழ்ச்சி

  மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலைய பெருமைபெற்றதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விருதினை வழங்கினார்.

  ஆய்வாளர் ஜோதி விருது வாங்கினார்

  ஆய்வாளர் ஜோதி விருது வாங்கினார்

  கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி, கான்பூர் சென்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையில் இருந்து இந்த விருதை பெற்று கோவை திரும்பியுள்ளார். இன்று கையில் கோப்பையுடன் காவல் நிலையம் வந்த ஆய்வாளருக்கு சக காவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  பூ தூவி வரவேற்பு

  பூ தூவி வரவேற்பு

  ஆய்வாளர் ஜோதி காவல் நிலையம் வந்ததும் வாசலிலேயே இரு மருங்கிலும் காவலர்கள் கூடி நின்று பூக்களை போட்டு வரவேற்றனர். ஆய்வாளர் ஜோதிக்கு உயர் காவல் அதிகாரி மாலை போட்டு வரவேற்றார்.

  காவல் நிலையத்தில் பூ அலங்காரம்

  காவல் நிலையத்தில் பூ அலங்காரம்

  நாட்டிலேயே சிறந்த காவல்நிலையம் என்ற பெருமைக்குரிய விருது பெற்று வந்துள்ள ஆய்வாளர் ஜோதியின் வருகையை முன்னிட்டு காவல் நிலையம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த காவல்நிலையத்தை சிறந்த காவல்நிலையமாக வைத்திருக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று ஆய்வாளர் ஜோதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Coimbatore RS Puram Police inspector Jothi received award from HM Rajnath singh for RS Puram station being selected as best station in India, a warm welccome given to Jothi after he returns with award.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X