For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்யவில்லை: கலாநிதி மாறன் மறுப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முழுமையாக வரி செலுத்திய பிறகும் அந்நிறுவனத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தம் மீது வழக்கு தொடர்வதில் உள்நோக்கம் இருப்பதாக சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த பல ஆண்டுகளாக நானும், என்னைச் சார்ந்த சன் குழும நிறுவனங்களும் ஆண்டு தோறும் ரூ.600 கோடிக்கும் அதிக மாக வருமான வரி செலுத்தி வருகிறோம். அதிக அளவில் தானாக முன்வந்து வரி செலுத்தியதற்காக வும், வருமான வரித் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காவும் 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சன் குழுமத்துக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

We're Not Tax Dodgers: Kalanithi Maran

இந்நிலையில், ‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ள தாகவும், அது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்து அதற்காக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

2014-15-ம் ஆண்டுக்கான வரி கள் அனைத்தும் 2015 பிப்ரவரிக்குள் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாக ‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தாமத மாக வரி செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினருடன் பேசி கால அவகாசம் பெற்று வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தில் நான் அன்றாட நிர்வாகப் பொறுப் பில் இல்லாத தலைவராக இருந் தேன். அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தலைவர், ஒரு நிறு வனத்தின் கணக்கு - வழக்குகள், வரி செலுத்துதல் போன்ற அன்றாட அலுவல்களில் ஈடுபட மாட்டார் என்பது விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.

ஆனால், வரி முழுமையாக செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கு தொடர்ந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. சமீபகாலமாக அரசின் சில துறைகள், எனக்கும் என்னைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் எதிராக செயல்பட முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பலவிதமான அவதூறு செய்தி களை பத்திரிகைகளில் வெளி யிட்டு சன் குழுமத்தின் புகழை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். யாரை திருப்திப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.

சன் குழுமத்துக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர் கொள்வேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

English summary
Kalanithi Maran sadi in a statement on Thursday to clear the air surrounding the allegations of SpiceJet TDS evasion case filed in a Delhi court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X