சபாநாயகரை சந்திக்க மாட்டோம்.. ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்..: தங்க தமிழ்ச்செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்-தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு-வீடியோ

  கூர்க்: சபாநாயகரை சந்திக்க மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து ஆளுநருக்கும் கடிதம் கொடுத்தனர்.

  இதைத்தொடர்ந்து ஆதரவை திரும்பப்பெறுவது குறித்து நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்.

  சபாநாயகரை சந்திக்கமாட்டோம்

  சபாநாயகரை சந்திக்கமாட்டோம்

  ஆனால் கடந்த 5 நாட்களாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என்று கூறினார்.

  ஆட்சியை கலைக்க தயங்கமாட்டோம்

  ஆட்சியை கலைக்க தயங்கமாட்டோம்

  குடியரசுத் தலைவர் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஆட்சியை கலைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

  கட்சியே முக்கியம்

  கட்சியே முக்கியம்

  ஆட்சியை விட கட்சியே முக்கியம் எனவும் தங்க தமிழ்செல்வன் கூறினார். ஆளுநர் மீதான நம்பிக்கை போய்விட்டதாகவும் இனி ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

  பாஜக நாடகமாடுகிறது

  பாஜக நாடகமாடுகிறது

  தமிழக அரசு பாஜகவுக்கு பயப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாஜக ஈபிஎஸையும் ஓபிஎஸையும் வைத்து நாடகமாடுவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran support MLA Thanga tamilselvan says that they will not meet speaker. He accused that BJP playing drama with OPS and EPS.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற