பாஸ்போர்ட்டில் இந்தியை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?: திமுக எம்.பி. கனிமொழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஸ்போர்ட்டில் தற்போது இந்தி மொழியை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை மேற்கொள்வதையே பாஜக அரசு நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அண்மையில் பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனைத்து பாஸ்போர்ட்களிலும் இனி ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தியும் இடம் பெறும் என அறிவித்தார்.

what is required to bring Hindi language in the passport: Kanimozhi MP

பாஸ்போர்ட்டுகளிலும் பாஜக இந்தியை திணிக்க முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய திமுக எம்பி கனிமொழி தற்போது பாஸ்போர்ட்டில் இந்தியை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் கீழடியை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழர் பண்பாட்டை விளக்கும் கீழடியை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK MP Kanimozhi has said that what is required to bring Hindi language in the passport. He also accused the BJP government of carrying out Hindi impose.
Please Wait while comments are loading...