For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டில் படிக்கும் பெண்ணுக்கே இவ்வளவு கோபம் என்றால்.. நெட்டிசன்கள் தாறுமாறு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆன #பாசிசபாஜக_ஆட்சிஒழிக!

    சென்னை: மாணவி சோபியா கைது தொடர்பாக நெட்டிசன்கள் கோபம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    ஒரு சிலர் சோபியா விமானத்திற்குள் வைத்து, கோஷமிட்டிருக்க கூடாது என கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது. இருப்பினும் பெரும்பான்மை நெட்டிசன்கள் கருத்து என்பது, சோபியாவை கைது செய்யும் அளவிற்கு நிலைமையை கொண்டு சென்றிருக்க கூடாது என்பதாக உள்ளது.

    இதுபற்றி, நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு ரவுண்டு பாருங்கள்.

    ஆத்திரங்கள் மக்களே

    வெளிநாட்டில் படிக்கும் விமானத்தில் வரும் பெண்ணுக்கே அத்தனை ஆத்திரம் வந்திருக்கிறது என்றால், ஏடிஎம் வாசலில் நின்னவங்க, ஜிஎஸ்டியாலே தொழிலை தொலைச்சவங்க, தினமும் பெட்ரோல், டீசல் போடறவங்க, மினிமம் பேலன்சே வைக்க முடியாம அபராதம் கட்டறவங்க என பெரிய பட்டியலே வெளியில் காத்திருக்கிறதே!

    குழந்தை பெற்றுள்ளார்களே

    விமானத்துல பல பெண்களுக்கு குழந்தையே பொறந்திருக்கு,விமானம் என்ன புள்ள பெத்துக்கிற இடமா. எல்லாம் ஒரு ஆக்சிடெண்டலா நடக்குறதுதான். அக்கா அங்க இல்லைனா அந்த பொண்ணு ஏன் கூவப்போகுது. எத்திக்சைலாம் மீறி ஒருத்தன் ஏன் கத்துறான்னு மட்டும் பாக்குறதே இல்ல.

    ஏன் கோபம்

    குஷ்பு கூறுகையில், ஏன் இந்த கோபம்? அக்கா இந்த விஷயத்தில் முதிர்ச்சியை காட்டியிருக்காலம். தனிப்பட்ட நபரை தாக்கும் கோஷம் எழுப்பப்படவில்லை. ஓ... மன்னிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது ஆடம்பர பொருளாகிவிட்டது. சாமானியர்களுக்கு கிடைக்காதல்லவா. அதேநேரம் நமது இளைஞர்களுக்கு நான் சொல்வது என்ன வென்றால், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இடம், பொருள் முக்கியம்.

    இப்படியும் ஒரு கருத்து

    விமானத்தில் பயணம் செய்யும் ஒருவர், அதுவும் குடும்பத்தோடு பயணம் செய்து கொண்டிருப்பவர்.. திடீரென ஒரு கட்சிக்கு விரோதமாக முழக்கமிடுவது எல்லாம் இயல்பான செயல் அல்ல. அது அதீதமானது அல்லது திட்டமிடப்பட்ட செயல். எதுவாகினும்.. முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது நல்லது.

    English summary
    What netizens saying on Sophia arrest, here we can find those details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X