For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன்காரர் தொல்லை, காக்கா 'கக்கா'.. தப்பிக்க அணிவீர் ஹெல்மெட்: இது வாட்ஸ்சப் கலகல!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஹெல்மெட் அணிவது இன்று முதல் டூவீலர் ஓட்டிகளுக்கும், பின்னால் அமர்ந்திருப்போருக்கும் கட்டாயமாகியுள்ளது தமிழ்நாட்டில். இதையடுத்து, காலக்கெடு நெருங்கும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக முந்தியடித்து சென்று ஹெல்மெட் வாங்கினார்கள் தமிழர்கள். சிலர் இது என்னடா வேலையத்த வேலை என்று மெத்தனம் காட்டுகிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் மெத்தனமாக இருக்க வேண்டாம். அரசு சொல்வதற்காக என்று இல்லை, பாதுகாப்புக்காகவும் இல்லை. அதை தவிர்த்த பல நன்மைகள் ஹெல்மெட்டில் உள்ளன என்பதை காமெடியாக கலந்து கட்டி வாட்ஸ்அப்பில் பரப்புகிறார்கள் 'சமூக போராளிகள்'. அப்படி ஒரு மெசேஜை பாருங்கள்.

கடன்காரரிடம் தப்பிக்க

கடன்காரரிடம் தப்பிக்க

ஹெல்மெட், ஹெல்மெட், ஹெல்மெட், எங்க பாத்தாலும் ஹெல்மெட் பிரச்சனை. சரி நாம மேட்டருக்கு வருவோங்க. ஹெல்மெட் யூஸ் பண்றதால என்ன மாதிரியான நல்ல விஷயங்கள் இருக்குனு பாப்போங்க. நமக்கு கடன் குடுத்த புண்ணியவான் ஆப்போஸிட்ல வந்தா, இனி மொகத்த திருப்பிட்டு வண்டிய ஓட்ட வேண்டாம். சாதாரணமாவே கண்டுக்காம போயிடலாங்.

வழுக்கையை மறைக்க

வழுக்கையை மறைக்க

மண்டைல முடி இல்லயேனு இனி கவலப்பட வேணா, வண்டி ஒட்ற எல்லாரோட மண்டயும் பளபளனு இருக்கேனு நம்மள நாமளே மனச தேத்திக்கலாம். கொஞ்ச நாள், கழிச்சு ஹெல்மெட் அவசியமில்லனு சொன்னா ஹெல்மெட்ட கவுத்து போட்டு பூத்தொட்டியா யூஸ் பண்ணிக்கலாம்.

ஹெல்மெட் தத்துவம்

ஹெல்மெட் தத்துவம்

இனி வண்டி ஓட்டும்போது செல்போன் பேசுனா ஃபைன் கட்ட வேண்டி இருக்காது. ஹெல்மெட்குள்ளயே காத ஒட்டி செல்போன சொருகி வச்சுக்கலாம்.
இனி நாமளும் ஆட்டோகாரங்க மாதிரி ஹெல்மெட்லயே வசனங்கள எழுதி வச்சு தத்துவம் சொல்லலாம்.

காக்கா, கக்கா

காக்கா, கக்கா

வண்டிய ஓரமா நிப்பாட்டி போன் பேசும்போது தலைல காக்கா "கக்கா" போய்டுமோனு கவலப்பட வேணா, தலைக்கு வந்தது தலப்பாகையோட போச்சுனு வழிச்சு தூக்கி போட்டுட்டு போய் பொழப்ப பாக்கலாம். மழைல நனஞ்சு வீட்டுக்கு வந்தா, தலைய தொவட்ட வேண்டிய அவசியம் இருக்காது.
வண்டில ஹெட்லைட் போனாக்கூட ஹெல்மெட்டே ஹெட்லைட் மாதிரி ஆப்போஸிட்ல வரவனுக்கு தெரியும், ஸோ.. பல்பு வாங்குற செலவு மிச்சம்.

பிச்சைக்காரர்களிடம் தப்ப

பிச்சைக்காரர்களிடம் தப்ப

சிக்னல்ல பிச்சைக்காரங்க தொல்லை தாங்கலனா ஹெல்மெட்ட கழட்டி தலைகீழா புடிச்சுகிட்டு நானும் பிச்சைக்காரன்தானு பாவ்லா காட்டி தப்பிச்சுடலாம். வண்டில போகும்போது திடீர்னு சண்ட வந்தா, ஹெல்மெட்ட கழட்டி ஓங்கி ஒரு அப்பு அப்பலாம். வீட்ல பூரி பலகை இல்லயேனு கவலைப்பட வேணா, ஹெல்மெட் மேலயே மாவ அழுத்தி அழுத்தி ரவுண்டாக்கி எண்ணைல போட்டு பூரி சுடலாம்.

ஆண்டிங்க தொல்ல

ஆண்டிங்க தொல்ல

ஹெல்மெட்ட செருப்பு கழட்டி போடுற எடத்துல வச்சுட்டா, மிளகா பொடி, டீத்தூள் இப்டி எதாச்சும் ஓசியா வாங்க வர பக்கத்து வீட்டு ஆண்டிகள் தொல்லை இருக்காது. வர ஆண்ட்டி வீட்ல ஆம்பள ஆள் இருக்குனு ரிட்டன் போய்டும். ஹெல்மெட் மேல மனுஷன் முகம் மாதிரியே ஸ்டிக்கர் ஒட்டி வச்சுகிட்டு செக்கிங் நிக்கிற போலீஸ்காரங்கள ஏமாத்தி சந்தோஷப்பட்டுக்கலாம்.

சரியா காது கேக்கலிங்க

சரியா காது கேக்கலிங்க

நமக்கு பின்னாடி நிக்கிற வண்டிக்காரங்க நொய் நொய்'னு ஹாரன் அடிச்சா, ஹெல்மெட் போட்டதால, சரியா கேக்கலனு அவங்கள நாம எரிச்சல்
படுத்தலாம். குதிரைக்கு கடிவாளம் கட்டி விட்ட மாதிரி நேரா வர்ற வண்டி மட்டும்தான் தெரியும், ஸோ, இனிமே திடீர்னு லெப்ட், ரைட்னு வண்டிய திருப்புறவன் பிரச்சனை இருக்காது. இனிமே மொபைல சார்ஜ் போட்டு அலமாரி & மீட்டர் பாக்ஸ் இப்டி எங்கயாவது வச்சு மொபைல் கீழ
விழுந்துடுமோனு பயப்படாம, ஹெல்மெட்டுக்கு உள்ளயே பத்திரமா சார்ஜ் போடலாம்.

English summary
Helmet is mandatory for two wheeler riders and pillion riders in Tamilnadu from July 1. As the people not interested to buying the helmets, a whatsapp message encourage them to buy it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X