ஆட்சி கவிழ்ப்பு வேணாம்... ஆட்டம் காட்டுவோம்... தினகரனின் மிரட்டல் பாலிட்டிக்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க தினகரன் திட்டமிடாவிட்டாலும், ஆட்டம் காட்டும் மிரட்டல் வேலையை செய்து வருகிறார்.

ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமியும், ஆட்சி, கட்சி அதிகாரத்தை கைப்பற்ற டிடிவி தினகரனும் முட்டி மோதி வருகின்றனர்.

அதிமுகவில் அம்மா அணியின் அதிகார மோதல், தமிழக மக்களை எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது எப்படா முடிவுக்கு வரும் என்று எதிர்பாக்கத் தொடங்கியுள்ளனர்.

நல்லாதானே நடக்குது

நல்லாதானே நடக்குது

கடந்த வாரம் தன்னை சந்திக்க வந்த தினகரன் ஆதரவாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே,

எல்லோரும் மாஜிதான்

எல்லோரும் மாஜிதான்

நான் ஓபிஎஸ் மாதிரி இருக்கமாட்டேன்.. என்னை பதவியில் இருந்து இறக்க நினைச்சா நீங்கள் எல்லோரும்தான் பதவியை இழப்பீங்க.. நான் முன்னாள் முதல்வரானால் நீங்களும் மாஜி எம்.எல்.ஏ.க்களாகிடுவீங்க என்றும் எச்சரித்துள்ளார்.

ஆதரவாளர்களுக்கு பதவி

ஆதரவாளர்களுக்கு பதவி

இதனையடுத்தே ஆட்சியை கவிழ்க்காமல் ஆட்டம் காட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன். முதலில் தனக்கு வேண்டிய நிர்வாகிகளை நியமித்தவர், இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். இது தொடரும் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அழிந்து போவார்கள்

அழிந்து போவார்கள்

இதனைத் தொடர்ந்தே எடப்பாடி பழனிச்சாமி தான் போகும் இடங்களில் எல்லாம் ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி நடக்கிறது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பேசி வருகிறார். துரோகிகளை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றம் பேசுகிறார் ஈபிஎஸ்.

CM Edappadi says there is no instability in the state | Oneindia Tamil
மிரட்டல் பாலிட்டிக்ஸ்

மிரட்டல் பாலிட்டிக்ஸ்

எடப்பாடிக்கு ஒரு கண்ணு போனா, தினகரனுக்கு 2 கண்ணும் போகும் எனவே ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பே இருக்காது. ஆனால் எத்தனை காலத்துக்கு இந்த மிரட்டல் பாலிட்டிக்ஸ் தொடரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இவர்களின் அரசியலில் சிக்கி சின்னாபின்னமாவது என்னவோ தமிழக மக்கள்தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People are getting upset and angry over the fight of both the factions of ADMK.
Please Wait while comments are loading...