யார் இந்த ஜான் மார்ஷல்? இங்கிலாந்தில் பிறந்தவருக்கு தமிழ்நாட்டில் சிலையா? ஏன் தெரியுமா?
ஜான் மார்ஷலுக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே இவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி எனப் பலருக்கும் புரிந்திருக்கும். அப்படி என்றால் இவருக்கு ஏன் தமிழ்நாடு அரசு சிலை வைக்க வேண்டும்? அதுவும் முழு உருவச் சிலை? இந்தக் கேள்வி பலருக்கும் எழலாம்.
அதுவும் ஏற்கெனவே கால்டுவெல் போன்ற திராவிட மொழிகளின் இலக்கணங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் மீதே ஆளுநர் ஆர்.என்.ரவி பல விமர்சனங்களை வைத்து வருகிறார். ஜி.யு. போப் போன்றவர்கள் மீது வலதுசாரி கருத்துகளைக் கொண்டவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஜான் மார்ஷல் என்ற புதிய பெயருடன் களத்தில் குதித்துள்ளது. இவர் யார்? என்ன செய்தார்? என்பதை தெரிந்து கொள்வது இளம் தலைமுறை மட்டுமல்ல; பழைய தலைமுறைக்கே பயன் தருவதாக இருக்கும். இந்த ஜான் மார்ஷல் 1876இல் இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் நகரில் பிறந்தார். ஏதென்ஸில் உள்ள பிரிட்டிஷ் பள்ளிக்கூடத்தில் 1898 முதல் 1901 வரை படித்தார். டல்விச் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு கிங்ஸ் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். அடிப்படையில் இவர் ஒரு தொல்லியல் ஆய்வாளர். இந்த ஆய்வாளரை இந்தியாவுக்கு அழைத்து வந்தவர் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் கர்சன். அதன்பின்னர் என்ன நடந்தது? அதைப்பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் சொல்கிறார் படியுங்கள்.
"இந்திய வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாத ஒரு பெயர்தான் ஜான் மார்ஷல். அவர் யார் என்றால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழத்தின் (Archaeological Survey of India) டைரக்டர் ஜெனரல் ஆக இருந்தவர் இவர். அதாவது 1902 ஆம் தொடங்கி 1928 ஆம் ஆண்டுவரை மொத்தம் 26 ஆண்டுகள் அந்தப் பதவியில் அவர் இருந்தார். இந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அவர் 1902 ஆம் ஆண்டுதான் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தார். அப்போது அவரது வயது வெறும் 26. இந்த இளைஞரை இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராக கர்சன் பிரபு நியமித்தார். அது ஒரு துணிச்சலான முடிவு. கர்சன் பிரபு என்பவர் 1899 தொடங்கி 1905 வரை இந்தியாவின் வைரஸ்ராய் ஆக இருந்தவர். இந்த இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகம் என்பது என்ன? இதை ஏன் ஆங்கிலேயர்கள் உருவாகினார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
இந்த ஆய்வுக்கழகம் 1821 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக இருந்தவர் அலெக்சாண்டர் கன்னிங்காம் ( Alexander Cunningham) என்பவர். இவர்தான் அதிக காலம் இதன் தலைவராக இருந்தவர். இவர் இந்தியாவின் பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களை ஆராய்ச்சி செய்தார். இவரது பதவிக்காலத்திற்குப் பிறகு இந்தக் கழகத்தின் பணிகள் குறைந்துபோனது. எந்தளவுக்குக் குறைந்தது என்றா? இப்படி ஒரு கழகம் தேவையா? இதற்கு ஒருவர் டைரக்டர் ஜென்ட்ரலாக இருக்க வேண்டுமா? என்று சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்குக் குறைந்தது.
அப்போதுதான் இந்தக் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு புதிய அதிகாரியை கர்சன் தேடினார். அவர் கண்டறிந்து கொண்டுவந்தவர்தான் இந்த ஜான் மார்ஷல். கேம்ப்ரிஜ் கல்லூரியில் படித்தவர். கிரேக்கம் மற்றும் துருக்கி ஆகிய பகுதிகளில் அகழாய்வுகளைச் செய்தவர். 26 வயதிலேயே தலைமைப் பொறுப்பு ஏற்கும் அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர். அவர் இந்தியா வந்த பிறகுதான் சிந்துவெளி அகழாய்வு பற்றிய புதிய முடிவுகள் நமக்குக் கிடைத்தன. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் பல தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற பொருட்கள் கிடைத்த போது, அந்த இடங்களுக்கு ஜான் நேரில் போகவே இல்லை. சிம்லாவிலிருந்த தனது தலைமை அலுவலகத்திற்கு அவற்றை வரவழைத்தார். அவற்றை நேரில் பார்த்த பிறகு அவருக்கு ஒரு விசயம் மனதில் தோன்றியது. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் தனித்தனி நாகரிகங்கள் இல்லை. இவற்றை இணைத்து வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். அதனடிப்படையில் இது ஒரு ஒருங்கிணைந்த நாகரிகத்திற்கான அடையாளம் என அறிவித்தார். அதை உலகமே வியந்து பார்த்தது.

இவர் இதை அறிவிப்பதற்கு முன்பாக இந்தியப் பண்பாடு என்பதே வேதங்களிலிருந்து தோன்றியதுதான் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், வேதகாலம் எனச் சொல்லப்பட்ட காலத்திற்கு முன்பே, அதாவது கி.மு.2500 ஆண்டுகள் முன்பு மிகப்பெரிய நகரங்கள், மிகப்பெரிய வீதிகள், குறிப்பிட்ட ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள், அதில் குளியலறை, குப்பைத் தொட்டிகள், எழுத்து வரி வடிவங்கள், பானை ஓடுகள் கொண்ட ஒரு செழிப்பான நாகரிகத்தைக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்ததைத் தனது ஆய்வு மூலம் கண்டு உலகிற்குப் புரியவைத்தார் மார்ஷல். அதுதான் சிந்துவெளி நாகரிகம். அது வேதகால நாகரிகத்திற்கு முன்பு தோன்றியது. அந்த சிந்துவெளிக்கும் நம் தமிழ்நாட்டில் உள்ள கீழடிக்கும் தொடர்பு உள்ளது. அங்கே கிடைத்த அதே மாதிரியான பொருட்கள் கீழடி ஆய்வில் இப்போது கிடைத்துள்ளன. அப்படி என்றால், இன்றிலிருந்து 4500 ஆண்டுகள் முன்பாக சிந்துவெளிக்கும் கீழடிக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கூட சிந்துவெளியில் கிடைத்த அதே மாதிரியான எழுத்து வடிவம், பானை ஓடுகள் பல கிடைத்துள்ளன. ஆகவே சிந்துவெளி என்பது திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையது. இதை முதல் முதலாகக் கண்டு பிடித்துச் சொன்னவர் ஜான் மார்ஷல். அந்தச் சிந்துவெளி ஆய்வு அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்காகத்தான் சிலையை வைக்க உள்ளது தமிழக அரசு" என்கிறார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications