தலைவர் பதவியை விடுங்க.. திமுகவின் அடுத்த பொருளாளர் யார்?.. பரபரக்கும் எதிர்பார்ப்பு
சென்னை: திமுகவின் அடுத்த தலைவர் என்று கேட்டால் ப்ரீகேஜி குழந்தை கூட டான் என்று பதில் சொல்லி விடும். ஸோ, அது முக்கியமல்ல. பொருளாளர் பதவி யாருக்கு என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அமர்ந்த தலைவர் பதவி திமுகவில் எத்தனை முக்கியமோ அதே போலத்தான் பொருளாளர் பதவிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. காரணம், திமுக முதல் முறையாக பெரும் பிளவை சந்திக்க காரணமே இந்த பொருளாளர் பதவிதான்.
எனவேதான் திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து இந்த பொருளாளர் பதவியும் முக்கியமாக பார்க்கப்படும். அந்த வகையில் தற்போது பொருளாளர் பதவியை தன் வசம் வைத்துள்ள மு.க.ஸ்டாலின் அதை யாரிடம் கொடுக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக இல்லாத திமுக
மு.கருணாநிதி என்ற இதயத்தைப் பறி கொடுத்து விட்டு திமுக நிற்கிறது. கட்சியின் தலைமைப் பொறுப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளனர். தலைவர் பதவியில் மு.க.ஸ்டாலின் மட்டுமே போட்டியில் இருக்கிறார். அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றும் கூட.

அடுத்த பொருளாளர் யார்
மு.க.ஸ்டாலின் வசமே தற்போது பொருளாளர் பதவியும் உள்ளது. தலைவர் பொறுப்புக்கு அவர் மாறினால் பொருளாளர் பொறுப்பு யாருக்கு போகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கனிமொழிக்கு தருவார்களா
இந்தப் பொறுப்பு கனிமொழிக்கு கிடைக்காது என்ற பேச்சும் உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று கூறப்படுகிறது. கனிமொழிக்கு வேறு பதவியைத் தருவார் ஸ்டாலின் என்றும் சொல்கிறார்கள்.

வேலு அல்லது துரைமுருகன்
ஸ்டாலினுக்கு தற்போது மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் துரைமுருகன், ஏவ வேலு, பொன்முடி உள்ளிட்ட சிலர்தான். இவர்களில் ஒருவருக்கே பொருளாளர் பதவி போகும் என்று சொல்லப்படுகிறது.

காலியாக கிடக்கும் து.பொ.செ
எஸ்பி சற்குணபாண்டியன் மறைவால் அவர் வகித்து வந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி காலியாகவே உள்ளது. அதை கனிமொழிக்கு தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் எப்படி செயல்படப் போகிறார்
திமுக தலைமைப் பொறுப்பு என்பது வரலாற்று நாயகர்கள் வகித்து வந்த பதவி. அண்ணா, கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் வகித்த பதவி. அந்தப் பதவிக்கு ஸ்டாலின் வருகிறார். அந்த அளவுக்கு அவர் தன்னை உயர்த்திக் கொள்ள இன்னும் நிறைய பாடுபட வேண்டியிருக்கிறது. அதை எந்த அளவுக்கு விரைவாக அவர் செய்யப் போகிறார் என்பதை வரும் நாட்கள் உணர்த்தும்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications