கள்ளக்குறிச்சி.. அப்பவே வார்னிங் கொடுத்தாங்க.. தமிழ் டீச்சரை கைது பண்ணுங்க.. சித்தி பரபர புகார்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் மாணவியின் சித்தி ரஞ்சினி புதிய புகார் ஒன்றை வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதோடு மாநில குழந்தைகள் நல ஆணையம் சார்பாகவும் மைனர் என்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி மரணம்
மாணவி மரணம் தொடர்பாக தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை மொத்தமாக 330 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் 1200 பேரின் போன்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

புதிய கோணம்
இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் மாணவியின் சித்தி ரஞ்சினி புதிய புகார் ஒன்றை வைத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மாணவியின் தற்கொலை முயற்சிக்கு தமிழ் ஆசிரியைதான் காரணம். நான் எல்லா டீச்சர்கள் மீதும் குறை சொல்ல மாட்டேன். இந்த ஒரு டீச்சர் மீது மட்டுமே குறை சொல்வேன். பல மாணவர்கள் நேராக சென்று இந்த தமிழ் டீச்சர் பற்றி குறை சொல்லி இருக்கிறார்கள்.

புகார்
அவர் பலரை மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. பலர் இதை பற்றி வார்னிங் கொடுத்து உள்ளனர். தலைமை ஆசிரியர் தொடங்கி எல்லோரும் சரிதான். ஆனால் இவர் மீதுதான் தவறு. மாணவிகளை அவர் மோசமாக அடிப்பார். மோசமாக நடத்துவார். கடுப்பாகி நடந்து கொள்வார். முக்கியமாக மாணவர்கள் முன் தவறாக திட்டுவார்.
Recommended Video

அவமானம்
அவமானப்படுத்துவார். இதனால் மாணவிகளுக்கு அழுத்தம் அதிகம் ஆகிவிடுகிறது. இவர் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். தயவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் சித்தி ரஞ்சினி கூறியுள்ளார். மாணவி மரணம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு ஆசிரியைகள்கைது செய்யப்பட்டுள்ள நிலையில்தான் தற்போது புதிதாக தமிழ் ஆசிரியை மீது மாணவியின் சித்தி புகார் அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications