ரஜினி வந்தபோது.. கோபாலபுரம் வீட்டில் கனிமொழி உள்ளிட்டோர் இல்லையே.. ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார் ரஜினிகாந்த்- வீடியோ

சென்னை: அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அங்கு கனிமொழி உள்ளிட்டோர் இல்லாதது சர்ச்சையாகியுள்ளது.

கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், முத்த தலைவர்கள் என யாரும் வர வேண்டாம் என ஸ்டாலின் கூறி விட்டதாக சொல்கிறார்கள். இதனால்தான் ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் உடன் இல்லையாம்.

Why Kanimozhi and others were missing during Rajini's Gopalapuram visit?

கருணாநிதியை சந்திக்க ரஜினி வருகிறார் என்ற செய்தியை அறிவாலயம் தரப்பில் காலையிலேயே கசியவிடப்பட்டது. வழக்கமாக கருணாநிதியை சந்திக்க வி.வி.ஐ.பி.க்கள் வந்தால் கோபாலபுரத்தில் ஸ்டாலின் உட்பட கருணாநிதியின் குடும்பத்தினரும், கட்சியின் மூத்த தலைவர்களும் ஆஜராவார்கள்.

அதே பாணியில், ரஜினி வருவகையின் போது செல்வி, ராஜாத்தியம்மாள், கனிமொழி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோர் கோபாலபுரத்துக்கு வர ஆசைப்பட்டனர். ஆனால், யாருமே வர வேண்டாம் என அவர்களுக்குத் தடை போட்டுவிட்டாரம் ஸ்டாலின். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kanimozhi and others were missing during Rajini's Gopalapuram visit yesterday. Sources say that, MK Stalin banned them to be there during Rajini's arrival to meet Karunanidhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற