ரஜினிகாந்த்தை மட்டும் ஏன் கர்நாடகா அழைக்கிறார் குமாரசாமி?
Recommended Video

சென்னை: கர்நாடகாவிலுள்ள அணைகளை வந்து பார்வையிடுமாறு ரஜினிகாந்த்துக்கு கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி அழைப்புவிடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிடம் காவிரி அணைகளின் கட்டுப்பாடு இருப்பது சரியல்ல என ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்து கூறியிருந்தார். இதுகுறித்து குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முதலில் பதிலளிக்க மறுத்திருந்தார்.
ஆனால், இன்று அளித்த பேட்டியொன்றில், ரஜினிகாந்த் கர்நாடகாவிற்கு வந்து அணைகளை பார்வையிடட்டும். அப்போது அவருக்கே உண்மை நிலை தெரியும் என்று கூறியுள்ளார்.

குமாரசாமி அழைப்பு
கர்நாடக முதல்வராக வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளார் குமாரசாமி. இந்த நிலையில், அவர் ரஜினிகாந்த்தை அணைகளை பார்வையிட வருமாறு அழைப்புவிடுத்துள்ளதற்கு கர்நாடகாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் எந்த ஒரு பதவியிலும் இல்லாதவர் என்பதால் அவரை கர்நாடக உள் விவகாரங்களில் பார்வையிட வருமாறு குமாரசாமி அழைத்தது தவறு என்று கர்நாடக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

கட்சியே இல்லை
அதேபோல தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. பல நெடுங்காலமாக காவிரிக்காக போராடி வரும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி தலைமைகள் இருக்கும்போது, கட்சியே ஆரம்பிக்காத மற்றும் காவிரிக்காக விவசாயிகளை போல களத்தில் வந்து போராடாத ரஜினிகாந்த்துக்கு அழைப்புவிடுப்பதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

போராளிகள் கோபம்
ரஜினிகாந்த்துக்கு குமாரசாமி இவ்வளவு முக்கியத்துவம் தருவது அவரை தங்கள் மண்ணின் மகன் என குமாரசாமி கருதுவதால்தான் என்கிறது ஜேடிஎஸ் வட்டாரம். கர்நாடக அரசியல்வாதிகள் ரஜினிகாந்த்தையே தமிழகத்தின் முகமாக முன்னிறுத்த பார்க்கிறார்கள்.இது இவ்வளவு நாள் களத்தில் நின்று போராட்டம் செய்வோருக்கு இழைக்கப்படும் துரோகம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உள்நோக்கம்
நடிகர் என்பதால் குமாரசாமி கருத்து தெரிவித்ததாக ஏற்க முடியவில்லை என கூறும் தமிழக போராட்டக்காரர்கள், கமல்ஹாசனும் கூட காவிரி பற்றி பல சந்தர்ப்பங்களில் கருத்து கூறியுள்ளார். அவர் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த்துக்கு மட்டுமே குமாரசாமி முன்னுரிமை கொடுப்பது உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் தரப்போ, குமாரசாமியின் நக்கல் பேச்சுதான் இது என்று கருத்து கூறுகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications