சட்டசபையில் ஜெ. படத்தை அவசரமாக திறந்தது ஏன்? பரபர பின்னணி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது-வீடியோ

  சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அவசரம் அவசரமாக திறந்து வைத்ததன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

  தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற ஓராண்டு பிப்ரவரி 16-ந் தேதி வருகிறது. அன்றைய தினம்தான் ஜெயலலிதா படத்தை திறப்பதாக திட்டமிட்டிருந்தனர்.

  இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க வழக்கமான லாபி மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி திட்டவட்டமாக வர விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டாராம்.

   மோடி நிராகரிப்பு ஏன்?

  மோடி நிராகரிப்பு ஏன்?

  மேலும் தமிழகத்தில் ஆளும் அரசு மீது ஊழல் பட்டியல்களை ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். அப்படியான நிலையில் தாம் கலந்து கொண்டால் அந்த அரசை ஆதரிப்பது போலாகும்; அதனால்தான் வரவிரும்பவில்லை எனவும் பட்டவர்த்தமான தெரிவித்துவிட்டாராம் பிரதமர் மோடி.

   தீர்ப்புக்கு காத்திருப்பு

  தீர்ப்புக்கு காத்திருப்பு

  இதையடுத்து ஆளுநர் தரப்பை நாடியுள்ளனர். ஆளுநரும் ஏற்கனவே ஏதோ ஒரு முடிவில் இருப்பவரைப் போல, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரட்டும்; அப்புறம் பார்த்து கொள்ளலாம் என பட்டும்படாமல் சொல்லியிருக்கிறார்.

   ஆளும் தரப்பு ஷாக்

  ஆளும் தரப்பு ஷாக்

  அத்துடன் சட்டசபையையும் கூட எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே கூட்டுங்கள் எனவும் ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுவிட்டதாம். இதை ஆளும் தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்.

   நீதிமன்ற தலையீட்டை தவிர்க்க..

  நீதிமன்ற தலையீட்டை தவிர்க்க..

  இதன் பின்னரே படத்தை தாங்களே திறப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 16-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கு முன்னர் நீதிமன்றத்தில் தடை பெற்றுவிடுவார்களோ என கருதியே பிரதமரும் ஆளுநரும் வராத நிலையில் முன்கூட்டியே திறந்துவிடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டு அவசரம் அவசரமாக இன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A portrait of Late CM Jayalalithaa unveiled in the Tamil Nadu assembly today. But the government has organised the event in a hurried manner, sources said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற