For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வீட்டு சிறையில் கருணாநிதி'- வைகோவை பேச தூண்டியது யார்? பரபர தகவல்

வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டுள்ளதாக வைகோவை பேச தூண்டியது யார் என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ பகிரங்கமாக பேசியது ஏன்? அவரைத் தூண்டியது யார் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. பின்னர் வீடு திரும்பியது முதலே அவருக்கு அங்கும் சிறிய சிகிச்சைகள் தரப்பட்டு வருகின்றன.

வீட்டு சிறை

வீட்டு சிறை

இதனால் நீண்ட நாட்களாக அவரிடம் இருந்து அறிக்கைகள் ஏதும் வரவில்லை. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென, கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கு ஸ்டாலினே காரணம் எனவும் மறைமுகமாகவும் குறிப்பிட்டார்.

கருணாநிதி குடும்பம் கவலை

கருணாநிதி குடும்பம் கவலை

இது குறித்து திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, வைகோ இப்படியெல்லாம் பகிரங்கமாக பேச 'தலைவர்' வீட்டு நபர்கள்தான் காரணம்... குடும்பத்தில் சிலரது போக்குகளால் பலரும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

போட்டுடைத்த வைகோ

போட்டுடைத்த வைகோ

ஆகையால் தலைவர் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக வைகோவிடம் எப்போதும் இயல்பாக பேசும் குடும்ப உறுப்பினர்தான் மேலோட்டமாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம். இதை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்ட வைகோ மேடையில் பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார் என்கின்றனர்.

அன்று நடந்தது...

அன்று நடந்தது...

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது வைகோவை திமுக தொண்டர்கள் தடுத்தனர். அப்போது, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் பேசிவிட்டுதான் நான் மருத்துவமனைக்கு போனேன். ஆனால் ஸ்டாலின் தரப்புதான் தமக்கு எதிராக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Here the behind the scenes of MDMK General Secretary Vaiko's comments on DMK leader Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X