கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிய மனைவி கைது !

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி, கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Wife arrested 'after cutting off husband's penis

இந்நிலையில் ஜெகதீசனும், அவரது மனைவி சரஸ்வதியும் நேற்று முன்தினம் நெருக்கமாக இருந்துள்ளனர். திடீரென ஜெகதீசன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசனின் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் துடித்து கொண்டிருந்தார். அப்போது அவர், தனது மர்ம உறுப்பை மனைவி அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் ஜெகதீசனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் வி.கோட்டா ராமகுப்பத்தில் தாய் வீட்டில் பதுங்கியிருந்த சரவஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் கூறியதாவது: கடந்த ஆண்டு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திர மாநிலம் வி.கோட்டா ராமகுப்பத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தேன்.

அப்போது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இருவரும் நெருக்கமாக இருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் கணவரின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டு ஓடிவிட்டேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Wife arrested 'after cutting off husband's penis Gudiyatham in vellore district
Please Wait while comments are loading...