For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் தின ஸ்பெஷல்... ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண்கள் குழு... உற்சாக பயணம்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களை பெண்கள் குழுவினர் இயக்கி சாதனை படைத்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து இரண்டு ஏர் இந்தியா விமானங்களை பெண்கள் மட்டுமே உள்ள குழு இயக்கி சாதனை படைத்துள்ளனர். ஒரு விமானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது இதே போன்று சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லும் விமானத்தையும் மற்றொரு பெண்கள் குழுவினர் இயக்கியுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுக்க ஒவ்வொரு நிறுவனங்களும் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது

ஏர் இந்தியா விமானம்

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண்கள் குழு மட்டுமே இரண்டு விமானங்களை இயக்கி உள்ளது. ஒரு விமானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது. இந்த விமானத்தை தீபா என்ற பெண் விமானி இயக்கினார். இவருடன்,தொழில்நுட்ப உதவியாளர்களாக பெண்களே பங்கேற்றனர்.

உற்சாக பயணம்

அதேபோல் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் செல்லும் விமானத்தையும் பெண்கள் குழு இயக்கியது. மகளிர் தினத்தை முன்னிட்டு உற்சாகமாக பெண்கள் குழுவினர் விமானத்தில் பறந்து சென்றனர்.

உற்சாக வரவேற்பு

பெண்கள் தினத்தை முன்னிட்டு விமானத்தில் பயணிக்க வந்தவர்களுக்காக ஏர் இந்தியா ஊழியர்கள் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மகளிர் தின பயணம்

பல நூற்றாண்டு போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் அனைத்துத் துறையிலும் இயங்கும் வாய்ப்பும் உரிமையும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயர உயர பறக்கும் பெண்கள் மகளிர் தினத்தில் உற்சாகமுடன் வரவேற்று அழைத்து சென்றனர்.

English summary
Woman pilot and team of women technician is going to run flight today. 2 filghts from chennai will be completely handled by women told Air india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X