For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கே வர மாட்டேன் என்பதை எவ்வளவு பாலீஷா சொல்றாரு நம்ம 'கேப்டன்'

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தால் தான் நானும் வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பால் விலையை உயர்த்தியதை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த் சட்டசபை பக்கமே வரவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது நான் வந்தால் ஜெயலலிதா வராததால் தான் வருகிறேன் என்பார்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா சட்டசபைக்கு வரும்போது நானும் வருவேன். அந்த அம்மா வராதபோது நான் வர மாட்டேன். குற்றம் செய்த நீங்களே முதல்வர் சீட்டில் உட்காரும்போது நான் எதிரே உட்கார்ந்தால் தான் என்ன.

குற்றவாளி

குற்றவாளி

ஊழல் குற்றவாளி முதல்வர். அவரை குற்றவாளி ஜெயலலிதா என்று தான் அழைக்க வேண்டும். யார் குற்றம் செய்தாலும் குற்றவாளி தான். அது விஜயகாந்தாக இருந்தாலும் சரி.

மின்வெட்டு

மின்வெட்டு

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை உள்ளது. இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள். மின் கட்டண உயர்வு பற்றி மக்களின் கருத்தை கேட்பது எல்லாம் நாடகம்.

பால் விலை

பால் விலை

பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. ஆவின் பால் கலப்பட்டம் குறித்து வழக்கு நடந்து வருகிறது. பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றார் விஜயகாந்த்.

English summary
DMDK chief Vijayakanth told that he won't come to the assembly when Jayalalithaa is not there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X