காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்.. தஞ்சையில் இளம் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் இளம் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Young graduate farmers keeps hunger strike in Thanjavur to set up the Cauvery Management Board

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளுங்கட்சி தரப்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னை வந்த மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் இளம் பட்டதாரி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு இளம் பட்டதாரி விவசாயிகள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Young graduate farmers keeps hunger strike in Thanjavur to set up the Cauvery Management Board. More than 300 people have participated in the fasting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற