கணவனை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய மனைவி.. அதிகாலையில் 5 கிமீ பயணம்.. முந்திரிக்காட்டில் ஷாக்
அரியலூர்: அண்ணன் முறை கொண்ட இளைஞரை காதலித்த பெண், அவருடன் சேர்ந்து தனது கணவரை எரித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சிக்கி உள்ளார் அந்த பெண்.. அரியலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பார்ப்போம்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு போகும் சாலையில் முந்திரிக்காடு அமைந்திருக்கிறது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

ஆணா பெண்ணா? : இதையடுத்து உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது எரிந்து கொண்டிருந்த உடலில் தீயை அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் காட்சியளித்தால், எரிக்கப்பட்டது ஆணா?, பெண்ணா? என்பது உடனடியாக போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோப்ப நாய்: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே அங்கு போலீஸ் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. முந்திரி தோப்பில் இருந்து மோப்பம் பிடித்த படி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் படுத்த நிலையில், அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றார்கள்.
ஏழு நாளில் துப்பு: இதனிடையே எரிக்கப்பட்டவர் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோனை செய்யப்பட்ட நிலையில், அந்த உடல் 35 வயது உடைய ஆண் உடல் என்பது தெரிந்தது. இதையடுத்து முந்திரிகாடு பகுதி முழுவதும் விசாரணை நடத்தியதில், ஏழு நாளைக்கு பின்னர் அவர் யார் என்பது அடையாளம் தெரிந்தது.
கள்ளக்காதல்: முந்திரி காட்டில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள தத்தனூர் குடிகாட்டில் இருந்து வடகடல் செல்லும் பாதையில் மெயின்ரோட்டில் ரத்தம் சிதறி கிடந்ததால் அதை வைத்து விசாரித்த போது தான் துப்பு துலங்கி உள்ளது. கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும். கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேசை அவரது மனைவியே கொன்று எரித்த அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷின் மனைவி அனுப்பிரியா, அவரது கள்ளக்காதலன் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
அண்ணன் முறை: அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடகடல் பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் நபர் சுரேஷ். இவரது மனைவி அனுப்பிரியா. சுரேஷ் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் அனுப்பிரியாவின் சித்தப்பா மகன் ஆலவாயை சேர்ந்த வேல்முருகன்,
சுரேஷ் வியாபாரத்துக்காக சென்னை சென்ற வேளையில் அனுப்பிரியாவை அடிக்கடி சந்தித்துபேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சுரேஷ் சென்னையில் இருக்க, இவர்கள் அடிக்கடி இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
மனைவி ஸ்கெட்ச்: இந்த விவரம் சுரேஷுக்கு அண்மையில் தெரியவந்தது. அவர் மனைவியை கடுமையாக கண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுப்பிரியா தனது கள்ளக்காதலன் வேல்முருகனுடன் சேர்ந்து, தனது கணவர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஸ்கெட்ச் போட்ட அனுப்பிரியா, சம்பவம் நடந்த அன்று சென்னையில் இருந்து சுரேஷை வரவழைத்தார். அதிகாலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் பிரிவு சாலையில் சுரேஷ் வந்து கொண்டிருந்த போது, வேல்முருகனும் அனுப்பிரியாவும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு: திடீரென சுரேஷை, அவரது மனைவி அனுப்பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் வேல்முருகன் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டிற்கு சாக்கில் மூட்டை கட்டி போட்டு சுரேஷின் உடலை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளனர். அதிகாலையில் பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவித்ததால் விஷயம் தெரிந்துள்ளது. இந்த விவாகரத்தில் கைதான வேல்முருகன், அனுப்பிரியாவிடம் உடையார்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications