அண்ணாமலைக்கு தஞ்சையில் நடைபெற்ற திடீர் பாராட்டு விழா! திமுகவை முந்திக் கொண்ட பாஜக!
தஞ்சை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியின் விவசாய அணி சார்பில் தஞ்சையில் திடீர் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலை கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தான் டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறி இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதலலமைச்சர் ஸ்டாலின் 4.4.2023 அன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை இரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை ரத்து செய்ததாக திமுக தரப்பில் கூறப்படும் நிலையில், நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தாக அண்ணாமலை மட்டுமே காரணம் என பாஜக கூறி வருகிறது.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தஞ்சையில் விவசாயிகளை அணி திரட்டி இதற்காக பாராட்டு விழா நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்துள்ள நிலையில், பாஜக முதல் ஆளாக முந்திக்கொண்டு அண்ணாமலைக்கு பாராட்டு விழா நடத்தி முடித்துவிட்டது.

டெல்டா பகுதி பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டி கர்நாடக சட்டசமன்றத் தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தஞ்சை வந்து சென்றிருக்கிறார் அண்ணாமலை.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications