தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சையில் விசாரணைக்கு அழைத்து சென்ற 3 நரிக்குறவ இளைஞர்கள்.. 3 நாட்களாக மாயம்? உறவினர்கள் கண்ணீர்

Google Oneindia Tamil News

தஞ்சை: நரிக்குறவ இன இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று 3 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை எங்கு வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் வல்லம் எம்ஜிஆர் பகுதியில் நூற்றுக்கணக்கான நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், விஜயன். அதேபோல தஞ்சை வல்லம் அடுத்த முனையம்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் ஆகிய 3 பேரையும் கடந்த ஒன்றாம் தேதி தனித் தனி இடங்களில் வைத்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் எதற்காக அழைத்துச் சென்றார்கள், என்ன வழக்கு போட்டார்கள் என்பது தெரியாமல் உறவினர்கள் காவல் நிலையத்தில் குழந்தைகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் மீது காவல்துறையினர் வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவதாகவும் அவர்களது மனைவிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஜெய்பீம் படத்தை ஜாதிய ரீதியாக எதிர்ப்பதா? 100க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் ஜெய்பீம் படத்தை ஜாதிய ரீதியாக எதிர்ப்பதா? 100க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

எம்ஜிஆர் நகர்

எம்ஜிஆர் நகர்

வல்லம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் வல்லம் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும் போது காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று தனித்தனியே விசாரணை நடத்தியதாகவும் ஆனால் தற்போது வரை ராஜ்குமார் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.

கணவர்

கணவர்

எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடாத தனது கணவர் மீது வீண் பழி போட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் அடைத்து வைத்துள்ளதாகவும் ராணி குற்றம்சாட்டுகிறார். அவரது மனைவி ராணி மேலும் தன்னையும் இரண்டு நாள்கள் தமிழ் பல்கலைக்கழக போலீஸார் அடைத்து வைத்து விசாரித்து பின்பு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

போலீஸார்

போலீஸார்

அதே போல் தமிழ் பல்கலைக்கழக போலீஸார் போலீஸ் நிலையத்தில் உள்ள விஜயன் தன்னுடைய தொலைந்த இருசக்கர வாகனத்தை கொடுப்பதாகக் கூறி ஆர்சி புக் உள்ளிட்டவற்றை எடுத்து வரச் சொன்ன நிலையில் விஜயன் மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகியோரை அவர்களுடைய வாகனத்தை ஒப்படைப்பதாக கூறி அழைத்துச் சென்ற நிலையில் திடீரென இருவரையும் இரண்டு நாட்கள் விசாரணைக்காக வைத்துக் கொண்டனர்.

சிகிச்சை

சிகிச்சை

விசாரணை எதற்கு என்ன குற்றச்சாட்டு என்றே தெரியாமல் அழைத்துச்சென்று வீண் குற்றச்சாட்டு சுமத்தி தன்னை மட்டும் இரண்டு நாட்கள் கழித்து விடுத்த நிலையில் தன் கணவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என்றும் விஜயன் ஒரு ஆண்டாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் சரோஜா.

இரும்பு கடை

இரும்பு கடை

அதேபோல தஞ்சை முனையம்பட்டியை சேர்ந்த பரமசிவம் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென வந்த காவல் துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்று விட்டதாகவும் முதல் தற்போது வரை என்ன வழக்கு என்று கூறாமல் எங்கு அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் உடனடியாக தனது தந்தையை மீட்டு தரவேண்டும் என தெரிவிக்கிறார் அவரது மகள்.

கணவர்

கணவர்

பிரிந்து வாழும் தங்களை வாழவிடாமல் காவல்துறையினர் செய்ததாகவும் வீணாக குற்றம்சாட்டி எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக உடனடியாக தங்களது கணவர்களை மற்றும் தந்தையை மீட்டுத்தர வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

English summary
Family of Narikuravas says that 3 were taken to police inquiry before 3 days. But they didnt know about whereabouts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X