ஹேமமாலினியை பார்த்தீங்களா.. "அது" மட்டும் வேணாமே.. நைஸா நழுவி.. ஆஹாஹா.. நம்ம தஞ்சாவூரே அசந்துடுச்சே
தஞ்சாவூர்: தமிழக அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதுமே பதறிவிட்டார் நடிகை ஹேமமாலினி.. என்னவாம்?
நடிகை ஹேமமாலினி.. இவர் ஒரு எழுத்தாளர்.. டைரக்டர்.. தயாரிப்பாளர்.. மிகச்சிறந்த நடன கலைஞரும்கூட.. இதற்கு நடுவில் அரசியலிலும் முத்திரை பதித்தவர். தற்போது எம்பியாக உள்ளார்.
1963ம் ஆண்டு இது சத்தியம் என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார்... 1968ம் ஆண்டு சப்னோ கா செளடாகர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அதன்பிறகு, பாலிவுட் இவரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது..
விவசாயிகளுக்கு ஒன்னும் தெரியாது. யாரோ கீ கொடுக்க, அவங்க போராடுறாங்க... ஹேமமாலினி காட்டம்!

கனவு கன்னி
பல வருடங்களுக்கு முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.. 2003 முதல் 2009 வரை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.- பாஜக சார்பில் அவர் ராஜ்யசபாவுக்கு சென்றார். 2014ம் ஆண்டு ஹேமமாலினி லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.. வடமாநில ரசிகர்களுக்கு கனவு கன்னியாகவே திகழ்ந்து வரும் நடிகை ஹேமமாலினி, அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதியது யார் தெரியுமா? பிரதமர் மோடிதான்.

கனவு கன்னி
பல வருடங்களுக்கு முன்னணி ஹீரோயினாகவ வலம் வந்தார்.. 2003 முதல் 2009 வரை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.- பாஜக சார்பில் அவர் ராஜ்யசபாவுக்கு சென்றார். 2014ம் ஆண்டு ஹேமமாலினி லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.. வடமாநில ரசிகர்களுக்கு கனவு கன்னியாகவே திகழ்ந்து வரும் நடிகை ஹேமமாலினி, அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதியது யார் தெரியுமா? பிரதமர் மோடிதான்.

மதுரா எம்பி
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் பிறந்து, கோலிவுட்டில் கலக்கி, பாலிவுட்டில் கால் வைத்து, இன்று வரை புகழின் உச்சியில் இருக்கிறார் ஹேம மாலினி.. தற்போது மீண்டும் தஞ்சாவூருக்கு வருகை தந்திருக்கிறார்.. பரதக்கலைஞர் கே.பி. கிட்டப்பா பிள்ளையின் 16வது நினைவு தினம் நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரான ஹேமமாலினி கலந்து கொண்டார்.. இளம் பரதநாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசினையும் வழங்கினார்..

கிளாசிகல்
ஹேமமாலினியை பார்த்ததுமே செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.. அப்போது அவர் சொன்னதாவது: "பரதநாட்டியத்திற்கென்று தனி ரசிகர்கள் இன்றுவரை இருக்கிறார்கள்.. அதேபோல அந்த நாட்டியத்தை கற்றுக் கொள்ளவும் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். சினிமாவில் உள்ள நடனம் அது வேறு மாதிரி.. உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது.. சினிமாவில் வந்துவிட்டது என்பதால் ரசனை குறைந்துவிட்டது என்று அர்த்தம் ஆகாது..

கிட்டப்பா பிள்ளை
என்னுடைய குரு கே.பி. கிட்டப்பா பிள்ளையிடமிருந்துதான் நான் பரதநாட்டியத்தில் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.. பரத நாட்டியத்திலுள்ள அனைத்து அசைவுகளையும் அவர் எனக்கு கற்று தந்தார்.. அதையெல்லாம் இப்போது நினைத்து பாரக்கும்போது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. அவர் மறைந்து 16 வருடங்கள் ஓடிவிட்டாலும், அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியவில்லை.. சினிமாவில் நடித்ததால், அதில்தான் நிறைய நாட்கள் கடந்தன..

பியூடிஃபுல் தஞ்சை
அதே நேரத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தேன்.. எனக்கு கிட்டப்பா பிள்ளை நிறைய புதிய புதிய விஷயங்களை சொல்லி சொல்லி தருவார்.. அவையெல்லாம் என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நீண்ட காலத்துக்கு பிறகு தஞ்சாவூருக்கு வந்துள்ளேன்.. அன்று பார்த்ததற்கும், இப்போது தஞ்சாவூரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. ரொம்ப அழகாக இருக்கிறது-. ரொம்ப சுத்தமாகவும், பார்க்கவே ஆச்சரியமாகவும் இருக்கிறது.. அதற்காக இந்த மாவட்ட நிர்வாகத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்" என்றார்.

அழகு தமிழ்
இதையடுத்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.. அதற்கு ஹேமமாலினி, மெல்ல சிரித்துக்கொண்டே, அதை பற்றியெல்லாம் நாம பேச வேண்டாம் என்று சொல்லி நைஸாக நழுவி கொண்டார்.. ஆனால், ஹேமமாலினி தமிழில் பேசுவதை கேட்கவே இனிமையாக இருக்கிறது.. இப்போதுள்ள சில நடிகைகள் தமிழில் பேசவே தயங்கும் நிலையில், தஞ்சை பெண்ணான ஹேமமாலினியின் தமிழ் அனைவரையும் பிரம்மிக்க வைத்துவிட்டது.. இவ்ளோ நல்லா தமிழ் பேசறாங்களே என்று பூரித்து பார்க்கின்றனர் தமிழகத்தின் இளைய தலைமுறையினர்..!!!