ராஜ ராஜ சோழன் 1037வது சதய விழா..யானை மீது வைத்து திருமுறைகள் ஊர்வலம்..பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா தஞ்சாவூரில் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. சதய விழாவையொட்டி கயிலாய வாத்தியம் முழங்க யானை மீது திருமுறைகள் வைத்து அடியார்கள் ஊர்வலமாக வந்தனர். ராஜ ராஜ சோழனின் சிலைக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். 48 விதமான வாசனை திரவியங்களால் தஞ்சை பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவில்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். 1037வா சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி சதய விழா
ராஜராஜ சோழன் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், நேற்றைய தினம் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார். விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சதய விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தான் என்பது பெருமையானது. ஒரு மன்னன், மக்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டால், காலத்தினால் யாராலும் மறக்க முடியாது என்பதற்கு ராஜராஜ சோழன்தான் சான்று. இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி.

பொக்கிஷம்
கண்ணன் ஆரூரான் என்பவர், ராஜராஜ சோழனின் பணியாளர் ஒருவர் தான் வெட்டிய குளத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகையை அன்பை பெற்றவர். காலத்தினால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தார். ஒரு மன்னன் போரில் படைக்கு பின் இருந்து வழிநடத்தாமல், படைக்கு முன்னின்று வழிநடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பது கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

ராஜராஜனுக்கு மரியாதை
சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்றைய தினம் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ராஜ ராஜ சோழனின் சிலைக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.

பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகிறது.

தஞ்சையில் கோலாகலம்
ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் பொன்னியின் செல்வன் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications