ஏடிஎம் ஷட்டரை மூடிய வியாபாரிகள்!"அதுவா மூடிகிச்சு சார்"னு திருடன் உருட்டு! சினிமா பாணி திருட்டு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்வதற்காக அலாரத்தின் வயரை துண்டித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது திருட்டு முயற்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பூதலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி முன்பு பொதுமக்கள் தேவைக்காக ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு நபர் ஏடிஎம் இயந்திரத்தின் வெளியில் உள்ள அலாரம் வயரை துண்டித்துவிட்டு, உள்ளே சென்ற அந்த நபர், ஷட்டர் கதவை மூடிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு அலர்ட் மெசேஜ் சென்றுள்ளது.

Thanjavur atm theft

இதையடுத்து வங்கி நிர்வாகம் பூதலூர் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது. அவர்கள் வந்து கதவை முழுமையாக மூடிக் கொண்டு பூதலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த போலீஸார் உள்ளே இருந்த நபரை கைது செய்து பூதலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பெயர் மணிகண்டன், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவருடன் கூட்டாளிகள் யாராவது வந்தார்களா? இவர் மீது ஏற்கனவே ஏதும் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகள் இருக்கிறதா என்றும் பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நள்ளிரவில் ஏடிஎம் மெஷின் பூட்டை உடைத்து திருட முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அந்த நபரை ஷட்டரில் வைத்து பூட்டி வைத்திருந்த நிலையில் அவர் கதவை தடதடவென தட்டிய சப்தம் கேட்டது. ஆனால் அங்கிருந்த வியாபாரிகள் கதவை திறக்கவில்லை.

இதையடுத்து போலீஸார் வந்ததும் கதவை திறந்த போது கையில் கம்புடன் அந்த நபர் வெளியே நின்றிருந்தார். இதையடுத்து அந்த நபரை உள்ளே அழைத்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் ஏடிஎம்மை சுத்தம் செய்ய வந்தேன் என்றார். பிறகு ஏடிஎம் ஷட்டர் அதாகவே சாத்திக் கொண்டது என்றார்.

இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறினார். பின்னர் பணம் எடுக்க வந்தேன் என மாற்றிக் கூறினார். "ஷட்டரை மூடிக் கொண்டு பணம் ஏன் எடுத்தாய்?" என போலீஸ் கேட்டதற்கு, அந்த நபர், "சார் நான் மூடவில்லை, அதுவாகவே மூடிக் கொண்டது" என்றார். இதையடுத்து போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+