"துண்டு சீட்டில்" பறந்த கணக்கு டீச்சர் மானம்.. தஞ்சாவூர் அரசு பள்ளியில் கரைபுரண்ட காமம்.. தடதட தஞ்சை
தஞ்சாவூர்: 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறியிருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதியப்பட்டு, போக்சோவிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.. எனினும் தஞ்சை மாவட்டமே அதிருப்தியில் உள்ளது. என்ன காரணம்?
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் முத்துக்குமரன்.. 35 வயதாகிறது.. பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.. இவர் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

பெற்றோர்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, இவர் மீது பாலியல் புகார்கள் கிளம்பின. இவரால் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள், சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தங்களுடைய புகாரை தந்திருந்தனர்... இதைப்பார்த்து அதிர்ந்த சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள், மறுநாளே அதாவது ஆகஸ்ட் 13ம் தேதி, பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரடியாகவே கிளம்பி சென்றார்கள்..
பள்ளியின் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளிடம், இதுகுறித்து கேட்டார்கள்.. பிறகு, அந்த மாணவிகளுக்கு பாலியல் தொடர்பாக விழிப்புணர்வையும் ஊட்டினார்கள்.
ஹெல்ப் லைன்: அதுமட்டுமல்லாமல், முத்துக்குமரன் தொடர்பாக, புகாராக இல்லாமல், துண்டு சீட்டில் எழுதித்தர வேண்டும் என்று 43 மாணவிகளிடம் கேட்டார்கள்.. அதன்படியே சில மாணவிகள், முத்துகுமரனால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை துண்டு சீட்டில் எழுதி தந்தார்கள்..
அதை படித்து பார்த்ததுமே, சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்... பிறகு, சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், தங்களின் விசாரணை அறிக்கையை, முதன்மை கல்வி அலுவலரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர்.. இந்த அறிக்கையின்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன், மறுநாளே அதாவது ஆகஸ்ட் 14ம் தேதியே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதிருப்திகள்: ஆனால் இந்த சம்பவம் நடந்து 2 மாத காலமாகியும், கல்வித்துறை தரப்பில் எந்த புகாரும் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அதிருப்திக்குள்ளான பெற்றோர்கள் சிலர், மறுபடியும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினரை தொடர்புக்கொண்டு கேட்டிருக்கிறார்கள்.. அப்போதுதான் முத்துக்குமரன் மீது எந்தவித வழக்கும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியின் முன்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதற்கு பிறகே, முத்துக்குமரன் மீது ஒரத்தநாடு மகளிர் ஸ்டேஷனில் கடந்த அக்டோபர் 8ம் தேதி புகார் தரப்பட்டது.. இந்த புகாரின்பேரில் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரனை கைது செய்தனர்.. பிறகு விசாரணையையும் துவங்கினர். அப்போது, தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக, முத்துக்குமரன் போலீசில் ஒப்புக் கொண்டாராம்.
துண்டு சீட்டு: எனினும்,மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை, துண்டு சீட்டில் எழுதி தந்தும்கூட, ஆசிரியர் மீது ஏன் வழக்கு பதியாமல் இருக்க வேண்டும்? என்று பெற்றோர்கள் நொந்து கேட்கிறார்கள்.
மாணவிகளிடம் பாலியல் அக்கிரமத்தை செய்தும்கூட, அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு அதிர்ச்சியளிப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். பள்ளி மாணவிகள் சுமார் 43 பேர் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்து 2 மாதம் கழித்து இப்போதுதான் வழக்கு பதியப்பட்டிருக்கும் சம்பவம், டெல்டா மாவட்டத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!!
தலைமை ஆசிரியர்: கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி, பள்ளிக்கு சென்ற சைல்டு ஹெல்ப் லைன் வழக்குப் பணியாளர் செண்பகமலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகிய இருவரும், பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடுதான், 9 மற்றும் 10 வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது முத்துக்குமரன் என்ன செய்தார் என்பதை நீங்கள் தைரியமாக புகாராக அளிக்கலாம் என மாணவிகளிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்குபிறகுதான், 43 மாணவிகளும், முத்துக்குமரன் தங்களிடம் நடந்து கொண்டதைத் துண்டுச் சீட்டில் புகார் எழுதித்தந்து, "எங்களைப் பற்றி வெளியே தெரிய வேண்டாம், அவர் மீது ப்ளீஸ், நடவடிக்கை எடுங்க" என்று ஆவேசமாக சொன்னார்களாம்..
புகார்கள்: ஒரே நேரத்தில் 43 மாணவிகளும் புகார் அளித்ததால் சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், புகாரும், வழக்கும் எதுவுமே அவர் மீது பதியாததால்தான், பெற்றோர்களும், மாணவிகளும் கொந்தளித்துவிட்டார்களாம். இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக.14ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரனைஒரத்தநாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டபோது, தலைமறைவாக இருந்திருக்கிறார் ஆசிரியர் முத்துக்குமரன்.. ஒருபக்கம் ஆசிரியர் தலைமறைவு, மறுபக்கம் அவர்மீது வழக்கு பதியாமல் இருந்தது, போன்றவை எல்லாம் சேர்ந்துதான் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை தந்துள்ளது. பெற்றோர்களின் கொந்தளிப்பை கண்டு, சைல்டு ஹெல்ப்லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர், கணித ஆசிரியர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம். அதற்கு பிறகே, தலைமறைவாகி இருந்த முத்துக்குமரனை போலீசார் தேடி கைது செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications