பச்சை துரோகம்.. ஆத்திகம் பேசிட்டே நாத்தியவாதியாக மாறுபவரை விட்டுவைக்க கூடாது" யாரை சொல்றார் மோகன் ஜி
தஞ்சாவூர்: நாத்திகர்களால் நமக்கு பிரச்னையில்லை.. ஆனால், ஆத்திகம் பேசிக்கொண்டு நாத்தியவாதியாக மாறுபவர்களை விட்டு வைக்கக்கூடாது என்று இயக்குனர் மோகன் ஜி பேசியிருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்பகோணம் சுவாமிமலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் முருக பக்தர்களின் சூரசம்ஹாரம் மாநாடு இன்றைய வெகுசிறப்பாக நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, நடிகர்கள் வையாபுரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறும்போது, "இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் இந்து சமய மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது. பழனியில் நடைபெறும் முருக பக்த மாநாட்டிற்கு, குழப்பமான கருத்துக்களை தெரிவித்து வரும் மாநாட்டு பொறுப்பாளரான சுகி சிவம் போன்றவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்புகழ்: இதே போல் சமீப காலமாகவே, முருகக்கடவுளை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாட புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும். முருகனின் ஆறுபடை வீடுகளை திருப்பதிக்கு நிகராக மேம்படுத்த வேண்டும். கோயில்களில் பக்தர்களிடம் கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். வரும் டிசம்பர் 6-ம் தேதி முருக பக்தர்களின் 2-வது மாநாட்டை நடத்த உள்ளோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் சிலர் பட்டியலின மக்களை தவறாக பயன்படுத்தி, அவர்களை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும், அந்த கட்சியினரும் பட்டியலின மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
மின்கட்டண உயர்வு: அதேபோல, மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்த உள்ளோம்.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக கெட்டுவிட்டது.. தமிழக ஆளுநர் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க வேண்டும். மத்திய அரசு குழு அமைத்து, தலையிட வேண்டும்" என்றார் அர்ஜூன் சம்பத்.
முன்னதாக, அர்ஜூன் சம்பத் தலைமையில் இந்த மாநாட்டில் கருத்தரங்கு நடைபெற்றது.. இதற்கு மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மோகன்ஜி: சொக்கபுர ஆதீனம் ஸ்ரீகாரியம் தம்புரான் சுவாமிகள், இலங்கை மருங்குளம் சச்சிதானந்தம், இந்து மக்கள் கட்சி சித்தர் பேரவை அண்ணாமலை சித்தர், நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் இயக்குநர் மோகன் ஜி பேசும்போது, "பழனியில் இருப்பது முருகனின் சிலை இல்லை, போகர் சிலை என சுகி சிவம் சொல்கிறார்.. தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ள போகர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. நாத்திகர்களால் நமக்கு பிரச்சனையில்லை, அவர்கள் இருக்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். ஆனால், ஆத்திகம் பேசிக்கொண்டு நாத்தியவாதியாக மாறுபவர்களை விட்டு வைக்கக்கூடாது. அவர்கள் துரோகிகள்" என்றார்.
தீர்மானங்கள்: இறுதியில் மாநாட்டில், முருகக்கடவுள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி, குழப்பங்களை ஏற்படுத்தும் சுகி சிவம் மற்றும் மங்கையர்கரசி போன்றவர்களை இம்மாநாட்டில் பங்கேற்க செய்ய கூடாது என்றும் டிசம்பர் 6ம் தேதி, இதே போன்ற 2வது சூரம்ஹார மாநாடு நடத்திட இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications