Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் "வலிமை".. தியாகராஜர் ஆராதனையில் பேசிய ஆளுநர்..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது. திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசினார். இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் 'ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை' சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது.

Thyagarayar Aradhanotsavam 2023 in Thiruvaiyaru - Today local holiday in Thanjavur district

இந்த ஆண்டுக்கான 176வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தியாகபிரம்மம் ஆந்திர பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக் கொண்டார். அதுதான் மிகப் பிரம்மாண்டமான எண்ணம். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான் இங்கே தியாகபிரம்மத்தின் இசையைக் கேட்க பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனர்.

வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழ் தான் நமக்கு உயிர். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை, அந்த மொழி பேசுபவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். எனவே, மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இதைச் சொல்வதால், தமிழை குறைத்துக் கூறுவதாக அரசியல் செய்யக் கூடாது.

Thyagarayar Aradhanotsavam 2023 in Thiruvaiyaru - Today local holiday in Thanjavur district

தியாகபிரம்மம் தமிழகத்தில் இருந்து தெலுங்கு கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதன் மூலம் மொழியின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை, அன்றைய மெய்ஞானம் திருவையாறில் நடந்துள்ளது. தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று கூறினார் தமிழிசை சவுந்தரராஜன்.

இதனையடுத்து நடைபெற்ற விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா இன்றைய தினம் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தார். இதில் ராஜ்யசபா எம்.பி ஜிகே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thyagarayar Aradhanotsavam 2023 in Thiruvaiyaru - Today local holiday in Thanjavur district

விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் இந்தியா வலிமையாக இருக்கிறது என்றார். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை காக்க உலகத்திற்கு இந்தியா ஒளியாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக நாடுகளில் இந்தியா முதன்மை நாடாகவும், தலைமை வகிக்கும் நாடாகவும் திகழும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

இதனையடுத்து நாதாஸ்வரம் இசைக்கச்சேரி நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சுதா ரகுநாதன், மஹதி, சின்மயி சகோதரிகள் ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, காலை 10 மணிக்கு நாதசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகை தந்துள்ளதை முன்னிட்டு தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+