தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் இறந்த முதியவர் உடலை வாங்க முன்வராத உறவுகள்.. இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

Google Oneindia Tamil News

தேனி: கொரோனா நோய் தொற்றால் இறந்த முதியவரின் உடலை யாரும் வாங்க முன்வராத நிலையில், இஸ்லாமிய அமைப்பினர் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி கிராமத்தில் 60 வயது முதியவர் கொரானா நோய்தொற்று ஏற்பட்டு இறந்தார். அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் யாரும் முன் வரவில்லை இந்த தகவல் கிடைத்ததையடுத்து தேனி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்ய முன்வந்தனர்

An old man died by covid , Islamic organization buried it according to Hindu rites

இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட பொருளாளர் ஹக்கீம் கம்பம் நகர தலைவர் தமீம் அன்சாரி ம ம க செயலாளர் இப்ராஹிம் ஜெய்லானி சையது முகமது ஆகியோர் க.புதுப்பட்டி கிராமத்திற்கு சென்று இறந்தவர் உடலை பெற்றுக்கொண்டனர். பின்னர் அங்குள்ள மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இந்த நிகழ்ச்சியானது மதச்சார்பற்ற சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைவதாக அந்த கிராம மக்கள் பாராட்டினார்கள்.

கொரோனா அல்லாத சிகிச்சைகளை தொடங்கிய மருத்துவமனைகள்.. அதிகரிக்கும் இன்சூரன்ஸ் கிளைம்! கொரோனா அல்லாத சிகிச்சைகளை தொடங்கிய மருத்துவமனைகள்.. அதிகரிக்கும் இன்சூரன்ஸ் கிளைம்!

இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் உரிய மத முறைப்படி அடக்கம் செய்யப்படுவதாகவும், இந்தப் பணியானது தங்களுக்கு மனநிறைவைத் தருவதாகவும் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

English summary
When no one came forward to buy the body of an old man who had died of the corana epidemic, the Islamic organization buried it according to Hindu rites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X