கழுத்தில் இரும்பு வளையத்துடன் நாகப்பாம்பு.. தேனி முருங்கை தோட்டத்தில் 12 அடி மலைப்பாம்பு.. என்ன ஆச்சு
தேனி: தேனி மாவட்டத்தில் ராட்சத மலைப்பாம்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முருங்கை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு அங்கிருந்தவர்கள் அலறிவிட்டார்களாம்.. இந்த பாம்பு சம்பவம் போலவே, உத்தரப் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பைக் கடைக்குள் புகுந்த நாகப்பாம்பின் கழுத்தில் இரும்பு வளையம் சிக்கியிருந்தத சம்பவம் பரபரப்பை தந்துவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஹ்தௌரில் உள்ள பைக் ரிப்பேர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. கடை திறக்க மெக்கானிக் வந்தபோதுதான், அங்கே நாகப்பாம்பு புகுந்திருப்பதை பார்த்து அதிர்ந்தார்..
அந்த நாகப்பாம்பின் கழுத்தில் இரும்பு வளையம் சிக்கியிருந்தது. இதையடுத்து பாம்பு பிடிவீரர் பரத் பாஸ்கருக்கு தகவல் தந்து வரவழைத்தனர்.. கடை மெக்கானிக் ஷாநவாஸ் உதவியுடன் சேர்ந்து அந்த பாம்பை பிடித்தார் பாஸ்கர்.

கழுத்தில் இரும்பு வளையம்
இப்போது அதன் கழுத்தில் சிக்கியிருந்த வளையத்தை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக முதலில் கடுகு எண்ணெய்யை அந்த வளையத்தின் மீது தடவினார்கள். பிறகு மெதுவாக வளையத்தை வெளியே எடுக்க முயன்றனர்.. ஆனால் அதற்குள் அந்த பாம்பு தப்பிக்க முயன்று துடிதுடித்தது.. இதனால் பாஸ்கரும், மெக்கானிக் ஷாநவாஸும் ப்தறிவிட்டனர்..
பிறகு ஒருவழியாக வளையத்தை அகற்றிய பிறகு, நாகப்பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.. பாம்பு கழுத்தில் சுற்றியிருந்த இரும்பு வளையத்தை, அகற்றும் காட்சி வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது..
தேனியில் புகுந்த 12 அடி மலைப்பாம்பு
இந்நிலையில், தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலும் மற்றொரு பாம்பு மீட்பு சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ஆண்டிப்பட்டி மலையடிவார பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்திற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது... தோட்டத்தில் இவ்வளவு பெரிய பாம்பை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த கண்டமனூர் வனத்துறையினர், நவீன உபகரணங்களை பயன்படுத்தி மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
25 கிலோ எடை
பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 25 கிலோ எடை கொண்டதாக இருந்தது. 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு இந்த மலைப்பாம்பு தோட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மலைப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டதால் விவசாயிகளும் அப்பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
ஒருபுறம் கழுத்தில் இரும்பு வளையத்துடன் சிக்கிய நாகப்பாம்பு, மறுபுறம் முருங்கை தோட்டத்திற்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பு என அடுத்தடுத்து வெளியாகும் இந்த சம்பவங்கள் பாம்பு மீட்பு தொடர்பான வீடியோக்களை இணையத்தில் கவனிக்க வைத்துள்ளன...!!!



Click it and Unblock the Notifications
