தேனியில் தப்புக்கணக்கு போட்ட தங்க தமிழ் செல்வன்.. பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் பிரச்சாரத்தின் போது சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று கூறிய போது, தப்புக்கணக்கு போட்டதால் சிரிப்பலை எழுந்தது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தேனி மாவட்டத்தில் களை கட்டியிருக்கிறது. இந்த முறை தேனியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிற்கிறார். இதேபோல் திமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் நிற்கிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி நிற்கிறார்.

லோக்சபா தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தல் பிரசார கூட்டங்கள், வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் போன்றவை தீவிரமாக நடந்து வந்தன. தற்போது திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்துடன், அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தேனி மற்றும் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். தேனியை ஒட்டியுள்ள வடபுதுப்பட்டியில் பிரசாரம் செய்தபோது, லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என்று தங்க தமிழ் செல்வன் கூறினார்.
அப்போது தங்க தமிழ் செல்வன் பேசுகையில், 'சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைத்த பிறகு மாதம் உங்களுக்கு 600 ரூபாய் நிச்சயம் மிச்சமாகும். மாதம் 600 ரூபாய் என்றால் 10 ஆண்டுக்கு எவ்வளவு மிச்சம் ஆகும் என்பதை கணக்குப் பண்ணி சொல்லுங்க. எனக்கு கணக்குப் பண்ண தெரியாது என்றார்.
நீங்களே கால்குலேட்டரில் கணக்குப் போட்டு பாருங்க. 10 ஆண்டுக்கு 120 மாதம். 120 மாதத்துக்கு ரூ.600 வீதம் கணக்குப்போடுங்க. எவ்வளவு வருது? கால்குலேட்டரை தட்டிப் பாருங்கப்பா' என்று கூட்டத்தை பார்த்து கேட்டார். அருகில் நின்ற சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட சிலர் செல்போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டுப் பார்த்து கொண்டிருந்தனர்.
அவருக்கு பின்னால் நின்ற நிர்வாகிகள் கணக்குப்போட்டு தங்க தமிழ் செல்வன் காதோரம் விடையளித்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டே, 'கடந்த 10 ஆண்டில் மட்டும் சிலிண்டருக்காக ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கே தெரியாது பாவம்' என்றார்.
மாதம் ரூ.600 என்றால் 120 மாதத்துக்கு ரூ.72 ஆயிரம் வரும். ஆனால், தங்க தமிழ் செல்வன் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என்று தப்பான கணக்கை சொன்னதால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications