ராஜா ராஜாதான்! கூடலூரு குண்டுமல்லி... சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த எம்.பி. இளையராஜா!
தேனி: இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான கூடலூரில் ரூ 9 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
1976 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய அன்னக்கிளி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் இளையராஜா. இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவை அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாகும்.

இளையராஜாவின் பாடல்களை கேட்பதற்காகவே அந்த காலகட்டங்களில் மக்கள் பார்த்த படத்தையே திருப்பி திருப்பி பார்த்தனர். அது போல் கதையம்சம் இல்லாவிட்டாலும் இவருடைய இசையால் ஜெயித்த படங்கள் எத்தனையோ இருக்கின்றன.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இவரது இசைதான் வேண்டும் என அவருடைய அலுவலகத்தில் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இவர் தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். ஆர் யூ ஓகே பேபி படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இளையராஜா பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அவருடைய சகோதரர் கங்கை அமரனும் விளக்கம் அளித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு இளைஞராஜாவுக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. அது போல் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.
இவர் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இளையராஜா தனது சொந்த ஊருக்கு செய்துள்ள காரியத்தை மக்கள் பாராட்டி வருகிறார்கள். தான் பிறந்த தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கு அமைக்கும் பணியில் இளையராஜா இறங்கியுள்ளார். இதற்கு அவர் தனது எம்பி தொகுதி நிதியிலிருந்து ரூ 9 லட்சம் செலவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இளையராஜா சோசியல் மீடியாவிலும் அவர் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து இளையராஜாவை பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications