1999 vs 2024 தேர்தல்.. இத்தனை ஒற்றுமைகளா? டிடிவி தினகரனுக்கு பின்னால் நின்றவர்கள்.. தேனி சுவாரஸ்யம்!
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார். 1999 லோக்சபா தேர்தலுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் நிறைய சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
தேனி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக சார்பாக குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன், திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அன்று கம்பம் செல்வேந்திரன்: 1999ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் (2009 தொகுதி மறுசீரமைப்பில் தேனி தொகுதி ஆனது) டிடிவி தினகரன் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டது, அப்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்திருந்த கம்பம் செல்வேந்திரன்.
இன்று தங்க தமிழ்ச்செல்வன்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் டிடிவி தினகரனை எதிர்த்து நிற்பது, அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து அதன் பிறகு அங்கிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன். தேனி களம் TTV vs TTS என்று ஆகியுள்ளது.
அன்று ஓபிஎஸ்: 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அன்றைய தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரனி செயலாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பணியாற்றினார். அப்போது, தங்க தமிழ்ச்செல்வனும் இவர்களுக்குத் தோள் கொடுத்தார்.
டிடிவி தினகரனுக்கு உதவியாக களப்பணி ஆற்றிய காரணத்தால் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 2001ல் பெரியகுளம் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. பெரியகுளம் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனிடம் பெற்றிருந்த நம்பிக்கையின் காரணமாகவே, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் கிரீடம் வந்தது. 3 முறை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகித்தது வரலாறு.

இன்றும் ஓபிஎஸ்: பின்னர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா உடனான கருத்து வேறுபாட்டல் பிரிந்தார் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனுடன் சில ஆண்டுகளாகவே தொடர்பின்றி இருந்தார். இந்நிலையில், டிடிவி தினகரனுடன் மீண்டும் கை கோர்த்து, 2024 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியையே டிடிவி தினகரனுக்காக விட்டுக்கொடுத்து, தினகரனுக்கு ஆதரவாக தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
அன்று காளிமுத்து, இன்று அவரது மகன்: 1999 கம்பம் செல்வேந்திரனுக்கு எதிராக, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து பிரச்சாரம் செய்தார். இந்த லோக்சபா தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக களத்தில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை தேர்தல் பணியாற்றி வருகிறார். காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.
பெரியகுளம் தொகுதி: முன்பு பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது 1977 முதல் 2004 வரை மொத்தம் நடைபெற்ற 10 தேர்தல்களில் 7 முறை அதிமுக வென்றுள்ளது. 1980ல் திமுகவின் கம்பம் நடராஜன் வென்றார். 1996ல் திமுகவின் ஞானகுருசாமி வென்றார். 2004ல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஜே.என்.ஆரூண் வென்றார்.
தேனி தொகுதி: கடந்த 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது தேனி மக்களவை தொகுதியில் சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேனி நிலவரம்: தேனி லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு தொகுதியாக இது கருதப்படுகிறது. தேனியில் கடந்த முறை ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இங்கு வெற்றி பெற்றார். தமிழ்நாட்டிலேயே அதிமுக கூட்டணி வென்ற ஒரே தொகுதி தேனி மட்டுமே.
இந்நிலையில், திமுக கூட்டணியில் தேனி தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுகவிலும், பின்னர் அமமுகவில் டிடிவி தினகரனுக்கு வலது கரமாகவும் திகழ்ந்த தங்க தமிழ்ச்செல்வன், தேனி தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து நிற்கிறார்.
தேனி களத்தில் வேட்பாளர்கள்: அதிமுகவில் வேட்பாளராக நாராயணசாமி என்பவரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாராயணசாமி தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பு வகித்தவர். தற்போது தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். டிடிவி தினகரன் vs தங்க தமிழ்ச்செல்வன் vs நாராயணசாமி என மும்முனை மோதல் நடக்கிறது. இரட்டை இலை அதிகம் முறை வென்ற தொகுதி என்பதால், தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் சவால் நிச்சயம்.

குழப்ப வாக்கு கணக்கு: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி லோக்சபா தொகுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் களமிறங்கினர். ஓபி ரவீந்திரநாத் வென்ற நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் மூன்றாமிடம் பிடித்தார். அன்று அமமுக சார்பில் நின்ற தங்க தமிழ்ச்செல்வன் தற்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து நிற்கிறார்.
2019ல் ரவீந்திரநாத் பெற்ற வாக்குகள் : 5,04,813
ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகள்: 4,28,120
அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் பெற்ற வாக்குகள்: 1,44,050
இப்போது திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் + டிடிவி தினகரன், அதிமுக என நிற்பதால், இந்த வாக்குகள் எந்த வகையில் பிரியும் என்பதே குழப்பம் தரும் கணக்கு.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications