படுக்கையில் மகளை அந்த கொடூர கோலத்தில்... பார்த்து கதறிய தாய், தந்தை.. எஸ்கேப் ஆன கணவன்!
தேனி: கேரள மாநிலம் கட்டப்பணை அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியின் உடலை அழுகிய நிலையில் மீட்ட போலீசார் வழக்கு பதிந்ததுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் பிஜேஸ் அங்கு விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி அனுமோல் (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 18-ந் தேதி பள்ளியில் இருந்து வந்த அனுமோலை காணவில்லை என்றுக அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பிறகு பிஜேசும் மாயமானார். இந்நிலையில் பாம்பனார் பகுதியில் வசித்து வந்த அனுமோலின் தந்தை ஜான் தனது மகளுக்கு போன் செய்தார். போன் ரிங் ஆகி பின்னர் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.

அழுகிய உடல்
இதனால் சந்தேகமடைந்த ஜான் மற்றும் அவரது மனைவி பிலோமினா , தங்களுடைய மகளை தங்களது மகளை பார்க்க வீட்டுக்கு வந்தனர். வீட்டின் படுக்கை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் போர்வை சுற்றப்பட்ட நிலையில் அனுமோல் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் கதறி அழுத ஜான் மற்றும அவரது மனைவி உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்து 3 நாட்கள்
இதையடுத்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமோலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், அனுமோல் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருப்பதால் காயங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

செல்போன் ஸ்விட்ச் ஆப்
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணத்தால் தனது மனைவியை கொலை செய்து விட்டு பிஜேஸ் தப்பி ஓடி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. பிஜேசுடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்.

நாடகமாடிய கணவர்
பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையான முடிவுகள் தெரியவரும். கொலை செய்த தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கடத்துவதற்காக அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்திருக்கிறது என போலீசார் தெரிவித்தனர். குழந்தையுடன் மாயமான பிஜேசை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மனனைவியை கொன்றுவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications